tamilnadu

img

ஒடிசா: கொரோனா பாதிப்பு 1336 ஆக உயர்வு

புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் ஞாயிறன்று புதிதாக 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1336 ஆக உயர்ந்துள்ளது. இந்த 67 பேரில், 60 பேர் தனிமைப்படுத்தப்பட்ட முகாமிலும், 4 பேர் வீடுகளிலும் தனிமையில் உள்ளனர். மேலும் 3 பேர் ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒடிசாவில் மொத்தம் உள்ள 30 மாவட்ட ங்களில் 27 மாவட்டங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 1,23,834 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.