tamilnadu

img

100 நாள் வேலையில் பெண்களின் பங்கேற்பு வீழ்ச்சி....

புதுதில்லி:
மகாத்மா தேசிய கிராமப்புறவேலை உறுதித்திட்டத்தில் (எம்.என்.ஆர்.இ.ஜி.எஸ்) பெண்களின் பங்கேற்பு விகிதம் கடந்த எட்டாண்டுகளில்  முதல் முறையாக 52.46 சதவீதமாக குறைந்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகமாக உள்ளது.தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் பங்கேற்கும் பெண்களின் சதவீதம் கடந்த ஆண்டு களைவிட குறைந்துள்ளதாக, அதற்கான இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரத்தின்படி, 2013-14- ஆம் ஆண்டைவிட (52.82 சதவீதம்) மிகக் குறைவாக இருப்பதுதெரிய வந்துள்ளது.தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் (NREGS) 13.34 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர். அதில்6.58 கோடி பேர் பெண்கள்  (49 சதவீதம்). கொரோனா ஊரடங்கு காரணமாக, வேலை செய்யும் நாட்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இந்தாண்டின் முதல் ஐந்து மாத கணக்குப்படி, கடந்த எட்டு ஆண்டுகளைவிட குறைந்து 52.46 சதவீதமாக உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கருத்து ஏதும் தெரிவிக்க வில்லை.அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2013-14-ஆம் ஆண்டைவிட 2016-ஆம் ஆண்டில் 56.16 சதவீதம் உயர்ந்திருந்தது. கடந்தாண்டை விட தற்போது 2.24 சதவீதம்  குறைந்துள்ளது. ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதால் பெண்களைவிட ஆண்களின் பங்களிப்பு அதிகமாகியுள்ளது.இந்திய அளவில் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் பணிபுரியும் நாட்களின் எண்ணிக்கையில் பெண்கள் பங்களிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.

நாடு முழுவதும் சரிவு விகிதம் 2.24சதவீதமாக உள்ளது, ஆந்திரா 3.58 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது, இதுநாட்டின் அதிகபட்ச அளவாகும்.மேற்குவங்கம் 3.32 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், தெலுங்கானா 2.62 சதவீதத்துடன் மூன்றா மிடத்திலும், ஹிமாச்சலப்பிரதேசம் 2.44 சதவீதத்துடன் நான்காமிட த்திலும் உள்ளது.அதே நேரத்தில் மிசோரம், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், குஜராத், கேரளா, ஒடிசா, மகாராஷ்டிரா, நாகாலாந்து, அசாம், கர்நாடகா, புதுச்சேரி,கோவா, அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுராவில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது.நூறு நாள் வேலைத்திட்டத்தில் கேரளம் (91.38 சதவீதம்), புதுச்சேரி (87 சதவீதம்), தமிழகம் (84.82 சதவீதம்), கோவா (75.75சதவீதம்) பெண்களின் பங்கேற்பு மிக அதிகமாக உள்ளது. 

;