tamilnadu

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது ஏன் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

புதுதில்லி,ஜூலை 2-  உள்ளாட்சித் தேர்தலை ஏன் இன்னும் நடத்தவில்லை என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம்   2016 ஆகஸ்ட் மாதத்துடன் முடி வடைந்தது. அதைத் தொடர்ந்து தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.  ஆனால் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதைக் காரணம் காட்டியும்  நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் அதிர்ச்சி யடைந்துள்ள அதிமுக அரசு, உள்ளாட்சித் தேர்தலை நடத்த விருப்பமில்லாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே வருவ தாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. உள்ளாட்சித் தேர்த லை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.  நீதிமன்றத்தில் தமிழக அரசு, உள்ளாட்சித் தேர்தலை நடத்த, தொடர்ந்து கால அவகாசம் கேட்டு தாமதப்படுத்தி வருகிறது.   உள்ளா ட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரி கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதை முடிவுக்கு கொண்டு வந்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இதனிடையே முதல் கட்டமாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் வழிமுறைகள் குறித்து அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் ஜூலை இரண்டாவது வாரத்தில் முடிய வாய்ப்புள்ளதாகவும் அத னைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாகவும்   மாநில தேர்தல் ஆணைய வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றன.  இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரை வில் நடத்த உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மனுவில் “தமிழ்நாட்டில் இரண்டரை ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் முடங்கி யுள்ளன. அதற்கு தீர்வு காணப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த பொதுநல வழக்கின் விசாரணை செவ்வாயன்று மீண்டும் நடைபெற்றது.  அப்போது, உள்ளா ட்சித் தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  இதற்கு தமிழக அரசு வழக்கறி ஞர் பதிலளிக்கையில், “மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்  படையில் உள்ளாட்சி தேர்தலுக் காக தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டன. இதனால் தாமதம் ஏற்பட்டுவிட்டது. எனவேதான் திட்ட மிட்டபடி உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலவில்லை” என்று கூறினார்.  அதனை ஏற்காத உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து தாமதம் செய்யக் கூடாது. உள்ளாட்சி தேர்த லுக்கான இறுதிக்கட்ட பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து 2 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக ஏற்கனவே கூறியுள் ளது. வாக்காளர் இறுதி பட்டியலை தந்து விட்டால் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் பணிகளை தொடங்கி விடு வோம்.  உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு களை கவனிக்க 49 நாட்கள் அவகாசம் அளித்தாலே போதும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வந்துள்ளது. அதை மேலும்  6 மாதங்களுக்கு கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவித்துள் ளது.

;