tamilnadu

img

பேரிடர் மேலாண்மைச் சட்டம் என்ன ஆனது.. கொரோனா இடரில் இறந்தோருக்கு நிதியுதவி அறிவிக்காதது ஏன்?

புதுதில்லி:
மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான கபில்சிபல், காணொலி மூலம் செய்தியாளர் களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பிரதமர் மோடிக்கு அவர்பல்வேறு கேள்விகளை எழுப்பியுள் ளார். அவை வருமாறு:“பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் கேட்க விரும்புவதெல்லாம், ‘பிஎம்கேர்ஸ்’ நிதியத்தை உருவாக்கினீர் களே.. அதிலிருந்து கொரோனா பொதுமுடக்கப் பாதிப்பு தொழிலாளர்களுக்கு எவ்வளவு நிவாரணம் கொடுக்கப் பட்டது?”

இந்தக் கேள்விக்கு பிரதமர் பதில்அளித்துத்தான் ஆகவேண்டும். சிலதொழிலாளர்கள் நடந்து இறந்துள்ளனர், சிலர் ரயில்களில் இறந்துள்ளனர். சிலர் பசி, பட்டினியில் இறந்துள்ளனர்.பேரிடர் மேலாண்மைச் சட்டம் பிரிவு12-ஐ பிரதமருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதில், பேரிடர் காலங்களில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கும் வாழ்க்கையை இழந்தவர்களின் வாழ்வாதாரத்திற்கும் நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள் ளது. அதன்படி கொரோனா நெருக்கடியில் இறந்தவர்களுக்கு அரசு நிவாரணம்அறிவித்ததா? இந்தச் சட்டத்தில் கணவனை இழந்தபெண்களுக்கும் ஆதரவற்றவர்களுக் கும் நிவாரணம் வழங்கும் பிரிவு உள்ளது. இத்தகையோருக்கு இந்த அரசுஎன்ன கொடுத்தது, எவ்வளவு கொடுத்தது? வரும் நாட்களில் நம் நாடு பொருளாதாரத்தில் எதிர்மறைப் பகுதிக்குச் செல்லவிருக்கிறது. இதை ரிசர்வ் வங்கியும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நாட்டில்45 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களது நிலை என்னவாகப் போகிறதோ தெரியவில்லை? எனவே, கடந்த 6 ஆண்டுகளாக இந்த அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களையெல்லாம் ஓரமாக வைத்து விட்டு, இனிமேலாவது ஏழைகளை மீட்கபுதிய கொள்கைகளை வடிவமைக்க வேண்டும். இவ்வாறு கபில் சிபல் கூறியுள்ளார்.

;