tamilnadu

img

விமானம் இயக்கிக் கொண்டிருந்தபோதே 48 பைலட்டுகள் பணியிலிருந்து நீக்கம்.... மத்திய பாஜக அரசுக்கு ஐசிபிஏ அமைப்பு கண்டனம்

புதுதில்லி:
கடந்த வியாழக்கிழமையன்று ‘ஏர் இந்தியா’வின் 48 விமானிகள்  திடீரென பணியிலிருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.அதுமட்டுமல்லாமல், இந்த 48 விமானிகளும் விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த நேரத்தில், பணிநீக்க உத்தரவு பிறப் பிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை தனியாருக்கு விற்க முடிவெடுத்த மத்திய அரசு, ஊழியர்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்ற முடிவு செய்தது. மாதக் கணக்கில் சம்பளப் பாக்கி வைத்து, அவர்களாகவே வேலையை விட்டு போவதற்கான சூழலையும் ஏற்படுத்தியது. அண்மையில் கூட, சம்பளமே இல்லாமல்ஊழியர்களை ஐந்து ஆண்டுகளுக்கு விடுப்பில் அனுப்பும் திட்டத்தைக் கையில் எடுத்தது. இதற்கிடையேதான், 48 விமானிகளை தற்போது பணிநீக்கம் செய்துள்ளது.

இவர்களில் சிலர் 2019-ஆம் ஆண்டு ராஜினாமா கடிதம் கொடுத் தவர்கள் என்றாலும், ‘ஏர் இந் தியா’ விதிமுறையின்படி 6 மாதகாலத்திற்குள் அவர்கள் தங்களின் ராஜினாமாக்களை திரும்பப்பெற்றுக் கொண்டு விட்டார்கள்.ஆனால், மத்திய அரசு திடீரென அவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக கூறி, சிலர் விமானியாக பணியில் விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தபோதே, அவர்களை பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.கொரோனா பரவல் காலத் தில், ஆபத்து நிறைந்த சூழலில்,நாட்டுக்காகப் பணியாற்றியவர்களுக்கு இதுதான் பரிசா? இந்திய வர்த்தக விமானிகள் சங்கம்(ஐசிபிஏ) கேள்வி எழுப்பியுள் ளது. “பிற விமான நிறுவன ஊழியர்களைப்போல், ‘ஏர் இந்தியா’ பைலட்டுகள் பணிநீக்கம் செய் யப்படமாட்டார்கள் என்று மத்தியவிமானப் போக்குவரத்து அமைச்சகமும், ஏர் இந்தியா நிறுவனமும்,ஏற்கெனவே அளித்த உறுதிமொழி யையும் நினைவூட்டியுள்ளது.

;