tamilnadu

img

கலாச்சார ஆய்வுக்குழுவில்  திராவிட பண்பாட்டுக்கு இடம் எங்கே? மோடி அரசுக்கு எச்.டி. குமாரசாமி கேள்வி

பெங்களூரு:
இந்தியாவின் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரத்தை,பிற நாடுகளுடன் ஒப்பிட்டுக் கண்டறிவதற்கு 16 பேர் கொண்ட ஆய்வுக்குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

முழுக்க முழுக்க உயர் சாதியினரைக் கொண்டே இந்த குழுவை அமைத்துள்ள மோடி அரசு, தலித் - பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்களை புறக்கணித்துள்ளது. அதுமட்டுமன்றி, தென்னிந்தியாவிலிருந்தும் ஒருவரைக் கூட குழுவில் சேர்க்கவில்லை. இதற்கு எதிர்ப்பு எழுந்துவரும் நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியும் மத்திய அரசைக் கண்டித்துள்ளார்.‘’மத்திய அரசின் குழுவில் ஒருவர் கூட கன்னடர் இல்லை. திராவிடப் பண்பாடு தெரிந்த தென்னிந்தியர்களும் ஒருவர் கூட இந்தக் குழுவில் சேர்க்கப்படவில்லை. வடஇந்தியர்கள்தான் அதிகம் இடம் பெற்றுள்ளனர். இது, ஆய்வின் குறிக்கோள் குறித்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தென்னிந்தியர்களை ஒதுக்கி வைத்து, ஒட்டுமொத்த நாட்டின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் படிப்பது குறித்து நாம் எவ்வாறு சிந்திக்க முடியும்? இது ஒருதலைப்பட்சமானது’’ என்று குமாரசாமி கூறியுள்ளார். குழுவில் பெண்கள் இடம்பெறாததையும் அவர் கண்டித்துள்ளார்.

;