tamilnadu

img

பிரதமர் நிவாரண நிதி எதற்காக இருக்கிறது? சுப்பிரமணியசாமியும் கேட்கிறார்...

புதுதில்லி:
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரயில் பணம் வழங்க முடியாவிட்டால் பிரதமர் நிவாரண நிதி எதற்குஇருக்கிறது? என்று கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ், காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா ஆகியோர் கேள்வி எழுப்பி இருந்தனர். இவர்களுடன் பாஜக தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியசாமியும் தற்போது இணைந்துள்ளார்.“வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை இலவசமாக இந்திய அரசு அழைத்துவந்தது. ஆனால், இந்தியாவிற்குள்இருக்கும் தொழிலாளர்களை, ரயில்வே இலவசமாக அனுப்ப மறுக்கிறது என்றால் பிரதமர் நிவாரண நிதிக்குஎதற்காக உதவி செய்ய வேண்டும்?” என்று சுப்பிரமணியசாமி கேட்டுள்ளார். “பசி பட்டினியால் வாடும் இடம்பெயர்தொழிலாளர்களிடமிருந்து இவ்வளவு அதிகமான கட்டணத்தை வசூலிக்கும் இந்திய அரசின் செயல் மிகவும் மோசமானது” என்றும் விமர்சித்துள்ளார்.
 

;