tamilnadu

img

வறுமைக் கோட்டின் வரைவிலக்கணம் என்ன? மக்களவையில் பி.ஆர்.நடராஜன் கேள்வி

புதுதில்லி:
வறுமைக் கோட்டின் வரை விலக்கணம் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் பி.ஆர்.நடராஜன் புதனன்று மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.இதுதொடர்பாக, பி.ஆர்.நடராஜன் பேசுகையில்,  நாட்டில், நகர்ப்புற/கிராமப்புற வறுமைக் கோட்டிற்கென்று, அதிகாரப்பூர்வ மாக நிர்ணயிக்கப்பட்ட, வரை விலக்கணம் மற்றும் நியமனங்கள் அரசாங்கத்திடம் உள்ளதா என விபரங்களைக் கோரினார்.

இதற்கு மத்திய திட்டத்துறை இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் அளித்த பதில்கள் பின்வருமாறு:களத்திலிருக்கும் நிபுணர்கள்  அவ்வப்போது உருவாக்கும் பரிந்து ரைகளின் அடிப்படையில், முந்தைய திட்டக்குழு வறுமைக்கோட்டையும் வறுமை விகிதத்தையும் மதிப்பிட்டது. முந்தைய திட்டக்குழு, 1977ல் டாக்டர் ஒய்.கே.அலாக் தலைமையில் ,ஒரு பணிக்குழு வையும், பேரா.டி.டி. லக்டவாலா தலைமையில் 1989 ல் ஒரு நிபுணர்கள் குழுவையும், பேரா.சுரேஷ் டென்டுல்கர் தலைமையில் 2005 ல் ஒரு நிபுணர் குழுவையும் கட்டமைத்தது.2013ல் டெண்டுல்கர் கமிட்டியால் 2011-12ம் ஆண்டிற்காக பரிந்துரை செய்யப்பட்ட முறையை பின்பற்றி இறுதி வறுமை மதிப்பீட்டை, முந்தைய திட்டக்குழு ஒரு பத்திரி க்கை குறிப்பு மூலம் வெளியிட்டது.
வறுமைக் கோடு, மாதாந்திர தனி நபர் நுகர்வுச் செலவை (MPCE) அளவுகோலாக  கொண்டு வரையறை செய்யப்படுகிறது. கிராமப் புற மாதாந்திர தனி நபர் நுகர்வுச் செலவு ரூ.816 எனவும், நகர்ப்புற மாதாந்திர தனி நபர் நுகர்வுச் செலவுரூ.1000 எனவும் கொண்டு ,இந்தியஅளவில் 2011-12 ம் ஆண்டிற்கு வறுமைக்கோடு மதிப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

;