tamilnadu

img

விவேகானந்தா, ஆர்எஸ்எஸ் டிரஸ்டுகளை விசாரிக்கத் தயாரா?

புதுதில்லி:
பிரதமர் மோடியைத் தலைவராகவும், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட “பிஎம் கேர்ஸ்” அறக்கட்டளை, சீன நிறுவனங்களிடமிருந்து மட்டும் ரூ. 153 கோடி அளவிற்கு நன்கொடைகள் பெற்றிருப்பதுகுறித்து, காங்கிரஸ் கட்சி அண்மையில் கேள்வி எழுப்பி இருந்தது.இதற்கு பாஜக பதிலளிக்கவில்லை. மாறாக, சோனியா காந்திமற்றும் ராகுல் காந்தி தலைமையிலான ராஜீவ் காந்தி பவுண்டேசன்2005-06இல், சீனாவிடம் இருந்து 3 லட்சம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக பெற்றுள்ளது என்று பதில் குற்றச்சாட்டு வைத்தது.

அதுமட்டுமன்றி, மத்திய ஆட்சியதிகாரம் கையில் இருப்பதால், ராஜீவ் காந்தி பவுண்டேசன், ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு டிரஸ்ட் ஆகியவற்றுக்கான வெளிநாட்டு நன்கொடைகளை விசாரிக்க, அமலாக்க பிரிவு சிறப்பு இயக்குநர் தலைமையில் குழு ஒன்றை தற்போது அமைத்துள்ளது.இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி, தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.அதில், “ராஜீவ் காந்தி பவுண்டேசனில் யார் வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம், யார் கேட்கும் கேள்விக்கும் நாங்கள் தாராளமாக பதில் அளிக்க தயாராக உள்ளோம். ஆனால், எங்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, விவேகானந்தா பவுண்டேசன், பாரதிய ஜனதா ஓவர்சீஸ் நண்பர்கள் அமைப்பு,இந்தியா பவுண்டேசன், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் நன்கொடை பற்றி விசாரணை நடத்தத் தயாரா? என்று சவால் விடுத்துள்ளார்.இந்த 3 அமைப்புகளுக்கும் 9 பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் சிங்வி குற்றம் சாட்டியுள்ளார்.

;