tamilnadu

img

தில்லி வன்முறை பலி 53 பேராக அதிகரிப்பு

புதுதில்லி,மார்ச் 6- தில்லி வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 53 பேராக அதிகரித்துள்ளது.   மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக  அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை  (சிஏஏ) திரும்பப்பெறக் கோரி தில்லியில் போராடியவர்கள் மீது, அச்சட்டத்தை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக மதவெறிக்கும்பல் தாக்குதல் நடத்தி,வன்முறையில் ஈடு பட்டனர். இதில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர்  உயிரிழ ந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்னர்..  தில்லி வன்முறையில் ஏற்கனவே 48 பேர் பலியாகினர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தில்லி  வன்முறை சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. ஜி.டி.பி. மருத்துவமனையில் 44 பேரும், ராம் மனோகர்  லோகியா மருத்துவமனையில் 5 பேரும், ஜக்பிரவேஸ் சந்திரா மருத்துவமனையில் 3 பேரும், லோக்நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனையில் ஒருவரும் இறந்துள்ளனர். இந்த தகவலை மருத்துவமனை அதிகாரி கள் தெரிவித்தனர்.