tamilnadu

img

வன்முறையை வேடிக்கை பார்த்த தில்லி காவல்துறையினர்... ஐ.நா. மனித உரிமை ஆணையர் கண்டனம்

புதுதில்லி:
வன்முறைக் களமான தில்லியின் நிலைமை கவலைஅளிப்பதாகவும், இப்பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவை, உன்னிப்பாக கவனிப்பதாகவும் ஐ.நா-வின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்திருந் தார். இந்நிலையில், தில்லி வன்முறையின்போது, போலீசார் செயலிழந்து நின்றது,மிகவும் கவலை அளிக்கிறது ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையரான மிச்செல் பேச்லட்டும் கூறியுள்ளார்.ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 43-ஆவது ஆலோசனைக் கூட்டம் சுவிட்சர்லாந் தில் உள்ள ஜெனீவாவில் நடைபெற்றது. இந்தக் கூட் டத்தில் கலந்துகொண்ட மிச்செல் பேச்லட் மேலும் கூறியிருப்பதாவது:

“இந்தியாவில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத் தச் சட்டம் மூலம் உருவான தில்லி வன்முறையில் போலீஸ்செயல்படாமல் இருந்தது மிகவும் கவலை அளிக்கிறது.இந்திய நாடாளுமன்றத் தில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பெரும்பாலான இந்தியர்கள், அமைதியான முறையிலேயே தங்களின்எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இந்நிலையில் தில்லி வன்முறையின் போது, இஸ்லாமியர்களுக்கு எதிராக சில பிரிவினர் தாக்குதல் நடத்தியபோது காவல்துறையினர் பாராமுகமாக செயலற்று நின்றிருக்கிறார்கள். மேலும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசாரே ஏவி விடப் பட்டுள்ளனர்.”இவ்வாறு பேச்லட் கூறியுள்ளார்.

;