tamilnadu

img

தெருவுக்கே காவிப்பெயிண்ட் அடித்து உ.பி. பாஜக அமைச்சர் அராஜகம்...

பிரயாக்ராஜ்:
உத்தரப்பிரதேச பாஜக அமைச்சரான நந்தகோபால் நந்தி, தான் வசிக்கும்பகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் வலுக்கட்டாயமாக காவிப்பெயி ண்ட் அடித்து, அராஜகம் செய்துள்ளார்.

ஆதித்யநாத் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் நந்தகோபால் நந்தி,பிரயாக்ராஜ் எனப்படும் அலகாபாத்தின் பகதூர்கஞ்ச் என்ற இடத்தில் வசித்து வருகிறார்.இந்நிலையில், அவர் தனது இல்லத்தைச் சுற்றியுள்ள அனைத்து வீடுகளுக்கும், வலுக்கட்டாயமாக காவிப் பெயிண்ட் அடித்துள்ளார். இதற்கு அந்த வீட்டு உரிமையாளர்களின் அனுமதியையோ, ஒப்புதலையோபெறவில்லை. மாறாக, வீட்டு உரிமையாளர்களின் எதிர்ப்பையும் மீறி, பாஜக குண்டர்களை வைத்து இந்த அராஜகத்தை அரங்கேற்றியுள்ளார்.“எனது அனுமதி இல்லாமல் எனதுவீட்டில் ஏன் காவி வண்ணம் அடிக்கிறீ ர்கள்?’ என்று கால்நடை மருத்துவரான டாக்டர் ஜீவன் சாந்த் என்பவர் எதிர்த்துக் கேட்டுள்ளார். அப்போது அமைச்சர் ஏவிவிட்ட கும்பல், டாக்டர் ஜீவனை மோசமாக திட்டியதுடன், தாக்கவும் முயன்றுள்ளனர்.

அமைச்சரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரவி குப்தா என்பவரின் வீட்டிலும், 20 பேர் கொண்ட கும்பல் அத்துமீறிகாவிச்சாயம் அடித்துள்ளது. இதனை ரவிகுப்தா தட்டிக்கேட்டபோது “நாங்கள் அப்படித்தான் அடிப்போம். எங்களைத் தடுத்தால் கடும் விளைவுகள் ஏற்படும்’’ என்று அந்த கும்பல் மிரட்டியுள்ளது.தற்போது, டாக்டர் ஜீவன் சாந்த்தும்,ரவி குப்தாவும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.‘‘ஒரு குடிமகனாக எனது அடிப்படைஉரிமை சிதைக்கப்படக் கூடாது. என்னை அமைதியாக வாழ அனுமதிக்க வேண்டும். நான் ஒரு வணிகன். என்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. என்னுடைய வீடு காவி கலரில் இருக்க விரும்பவில்லை. நான் அவர்களின் செயலை எதிர்க்கும்போதே  என்னை தாக்கி, வலுக்கட்டாயமாக பெயிண்ட் அடித்து விட்டார்கள்’’ என்று ரவிகுப்தா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அமைச்சர் நந்தகோபால் நந்தி இதையெல்லாம் பொருட்படுத்துவதாக இல்லை. “வீடுகளை அழகுபடுத்தும் நோக்கத்துடனேயே காவிச் சாயம் அடிக்கிறோம்; சிவப்பு,பச்சை, சாக்லேட் கலரும் அதில் இருக்கிறது; ஆனால், சிலர் அழகுபடுத்துதலை விரும்பவில்லை; அவர்கள் வளர்ச்சிப் பணிக்கு எதிரானவர்கள்’’ என்று திமிராக பேட்டி அளித்துள்ளார்.

;