tamilnadu

img

அமெரிக்காவை இந்தியா மிக மோசமாக நடத்துகிறது.... வர்த்தக ஒப்பந்தங்கள் செய்ய விருப்பமில்லை

புதுதில்லி:
இந்தியப் பிரதமர் மோடியை நான் மிகவும் நேசிக்கிறேன்; ஆனால் இந்தியப் பயணத்தில் பெரிய அளவிற்கு வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வதற்கு விருப்ப மில்லை என அமெரிக்க ஜனாதிபதிடிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மனைவி மெலனியாவுடன் பிப்ரவரி 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.அவரை வரவேற்க 100 கோடி ரூபாய்செலவில் மோடி ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.“டிரம்பின் பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும், இந்தியா - அமெரிக்கா நட்பை இது மேலும் நீண்ட தூரம் கொண்டு செல்லும்; விருந்தினர்களுக்கு ஒரு மறக்கமுடியாத வரவேற்பை இந்தியா வழங்கும்” என்று பிரதமர்மோடி கூறிய நிலையில், “இந்தியப்பயணம் குறித்து நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளேன்” என்று டிரம்ப்பும் பதில் அளித்திருந்தார்.இந்நிலையில், “இந்தியாவுக்கு அடுத்தவாரம் செல்கிறேன். பலஆண்டுகளாகவே அமெரிக்காவை, இந்தியா மிக மோசமாக நடத்தி வருகிறது. உலகிலேயே அதிகம் வரி விதிக்கும் நாடு இந்தியா. அந்த நாட்டுடன் இணைந்து தொழில் செய்வது அமெரிக்காவுக்கு மிகவும் கடினம்”என்று டிரம்ப் திடீரென இந்தியா மீது பாய்ந்துள்ளார்.“பிரதமர் மோடியை நான் மிகவும் நேசிக்கிறேன்; ஆனால் இந்தியாவின் வர்த்தக செயல்பாடு கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது; எனவே இந்திய பய ணத்தில் வர்த்தக ஒப்பந்தங்கள் பெரியஅளவில் செய்வதற்கு விருப்ப மில்லை” என்றும் சலிப்பு காட்டி யுள்ளார்.அமெரிக்க முதலாளிகளுக்கு, சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தக வாய்ப்புக் களை தேடித்தர திட்டமிட்டுள்ள டிரம்ப், இந்தியாவுடன் அதுதொடர்பான பேரத்தை வலுப்படுத்தவே, இவ்வாறு போலியாக ஒரு சலிப்பைவெளிப்படுத்தியுள்ளார்.

;