tamilnadu

img

அன்னாசிப்பழத்தில் வெடியை மறைத்து வைத்து யானையைக் கொன்ற கொடூரர்கள்

மலப்புரம்:
கேரளா என்றாலே நினைவுக்கு வருவது யானைகள். வீடுகளில் வளர்க்கும் அளவுக்கு யானை - மனித பந்தம்அங்கு அதிகம். இந்த நிலையில்,  ஒரு யானைகொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் என்பவரால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தை அவர் தமது முகநூலில் மே 30-ஆம் தேதி பதிவிட்டுள்ளார்.

 மலப்புரம் பகுதியில் வெள்ளியாற்றில் கர்ப்பிணி யானை ஒன்று நின்ற நிலையில் இறந்துள்ளது. யானையின் இறப்புக்கான காரணத்தை மலப்புரம் மாவட்ட வன அதிகாரி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காட்டு யானை உணவு தேடி கிராமத்திற்குவந்த நிலையில், யாரோ வெடி பொருட்கள்மறைத்து வைத்த அன்னாசி பழத்தை உணவாகத் தந்துள்ளனர். நம்பி வாங்கி உண்டயானை, பழத்தை கடிக்கும்போது வெடிமருந்து வெடிக்க, அதன் வாய் மற்றும் நாக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 18 அல்லது 20 மாதங்களுக்குள் குட்டியை ஈனும் நிலையில் யானை இருந்தது.

வலியுடன் கிராமத்தின் தெருக்களில் ஓடியபோதும் யானை யாரையும் தாக்கவில்லை, எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. வெடிபொருள் வாய் மற்றும் நாக்கில் ஏற்படுத்திய படுகாயத்தால்  யானை உணவு உட்கொள்ள முடியாமல் தவித்துள்ளது. மே 27-ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு தண்ணீரில் நின்றபடியே உயிரிழந்துள்ளது. காயத்தின் மீது ஈ உள்ளிட்ட பூச்சிகள் அண்டாமல் இருக்க, யானை ஆற்றில் நின்று தண்ணீரை வாயில் தெளித்துக்கொண்டே இருந்துள்ளது. தகவல் அறிந்த வனத்துறையினர் சுரேந்திரன், நீலகந்தன் என்ற இரு கும்கியானைகளை அழைத்துச்சென்று, கர்ப்பிணியானையை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால்,  யானை இறந்த நிலையில் இருந்துள்ளது. இதனை அடுத்து, அப்பகுதியிலேயே யானைக்கு இறுதி மரியாதை செய்து எரியூட்டியுள்ளனர். வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணனின் இந்த பேஸ்புக் பதிவு வைரலாக பரவி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

;