tamilnadu

img

நீதிபதிகள் மீதான புகார்களுக்கு இடமாற்றம் தீர்வில்லை

புதுதில்லி:
சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுபவர் டாம் கின்ஸ்பெர்க். இவர், அரசியலமைப்பு ஜனநாயகத்தை பாதுகாப்பது எவ்வாறு?” (How to Save a Constitutional Democracy) என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதன் அறிமுக விழா, செவ்வாய்க்கிழமையன்று தில்லியில் நடைபெற்ற நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பங்கேற்று உரையாற்றியுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:

நீதி அமைப்புகளுக்கான சுதந்திரம் என்பது விதிமுறைகளாலும் நடவடிக்கைகளாலும் பின்பற்றப்படுவது இல்லை. மாறாக தேவையற்ற மறைமுக தாக்குதல்களில் இருந்து காப்பாற்றப்படுவதன் மூலமே சாத்தியம்.எல்லோருக்கும் பொதுவான முறையில்தான் நீதித்துறை செயல்பட்டு வருகிறது. நீதிபதிகளை மக்கள் நம்ப வேண்டும். ஜனநாயகம் ஒரே மூச்சில் அழிக்கப்பட்டு விடுவதில்லை. ஆனால் ஆங்காங்கே நிகழும் சிறு சிறு நிகழ்வுகள் இந்திய ஜனநாயத்திற்கும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. இதனை சரி செய்யும் பொருட்டு நீதிபதிகள் இந்த விசயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.இடைக்கால நீதிபதிகளை உயர் நீதிமன்றங்களில் அமர்த்துவது ஏன்? இன்று இன்னும் புரியவில்லை. உச்சநீதிமன்றத்திலும் கூட கேசவானந்த பாரதியின் வழக்கை விசாரிக்க 13 நீதிபதிகள் தேவைப்பட்டனர். தினம் தோறும் நடத்தப்படும் வழக்கில் மூன்று இடைக்கால நீதிபதிகள் பணியில் அமர்த்தப்பட்டனர். நீதிமன்றங்களுக்கு தேவையான நீதிபதிகளை பணியில் அமர்த்துவதில் அதிக தொய்வு ஏற்படுகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 62 என்பது மிகவும் குறைந்த வயது தான். அதனால் 65 வயது வரை அவர்கள் பணியாற்றலாம். நீதிபதிகள் மீது வைக்கப்படும் புகார்களுக்கு அவர்களை பணியிடம் மாற்றுவது தீர்வாகாது.இவ்வாறு நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசியுள்ளார்.

;