tamilnadu

img

செல்போன் அழைப்பில்  மாற்றம் செய்த டிராய்

புதுதில்லி:
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் செல்போன்களில் இன்கமிங் அழைப்புகளுக்கான ஒலி நேர அளவில் மாற்றம் செய்துள்ளது.இந்தியாவில் செல்போன்களுக்கு வரும் அழைப்புகளின் ஒலி நேரத்துக்கு வரையறை இல்லை. ஒவ்வொரு செல்போன்நிறுவனமும் 30 வினாடிகள் முதல் 45 வினாடிகள் வரை அழைப்பு ஒலி நேரத்தை வழங்கி வந்தன.இந்த நிலையில் அழைப்பு ஒலி நேரத்தை முறைகேடாகபயன்படுத்தி ஆதாயம் அடைவதாக செல்போன் நிறுவனங்களுக்குள் சர்ச்சை நிலவி வந்தது. இதைத் தொடர்ந்து அழைப்பு ஒலி நேரம் தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை நிறுவனமான டிராய் புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது.இதன்படி செல்போனில் அழைப்பு ஒலி நேரம் 30 வினாடியாகவும், லேண்ட்லைன் போனில் அழைப்பு ஒலி நேரம் 60 வினாடியாகவும் இருக்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது. இது இன்னும் 15 நாட்களில் அமலுக்கு வருகிறது.

;