tamilnadu

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

சீனாவின் முக்கிய அதிகாரிகளுக்கு விசா வழங்க கட்டுப்பாடு விதிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார்.
♦♦♦
தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய இணை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
♦♦♦
உத்தரப்பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான ரவுடி விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளி அமர் துபேயை அதிரடிப்படை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
♦♦♦
லண்டனில் 3 நாட்கள் நடைபெறுகிற உலகளாவிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக கலந்துகொண்டு பேசுகிறார். இது, இந்தியாவுக்கு தொழில், வர்த்தக, முதலீடு வாய்ப்புகளை ஈர்க்கும் என கூறப்படுகிறது.
♦♦♦
கேரள மாநில பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்துப் பாடத்திலும்  முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற வால்பாறை செட்டில்மென்டில் வசிக்கும் பழங்குடியின மாணவிக்குப் பல்வேறு தரப்பினர் பாராட்டுத் தெரிவித்தனர்.
♦♦♦
நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடைபெற உள்ளதையொட்டி, அதில் பங்கேற்க வரும் எம்.பி.க்கள் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
♦♦♦
மாஸ்க், சானிடைசர் ஆகிய இரண்டு பொருட்களையும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது.
♦♦♦
ஹாங்காங்கில் சீனாவின் தேசிய பாதுகாப்பு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.