tamilnadu

img

அரசை விமர்சிப்பதே தேசவிரோதமாகி விடாது... பெரும்பான்மைவாதம் ஜனநாயகத்திற்கு எதிரானது

புதுதில்லி:
ஜனநாயகத்தில் எதிர்ப்பை அடக்க நினைக்கும் எந்த முயற்சியும், மக்களின் பேச்சுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கூறியுள்ளார்.உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ‘ஜனநாயகமும், எதிர்ப்பும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் தில்லியில் நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா பங்கேற்று உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நாடுமுழுவதும் சமீப காலமாக நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்கும் மக்களை ‘தேச விரோதிகள்’ என்று சொல்கிறார்கள். காரணம் அவர்கள் அரசை எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பதுதான்.ஜனநாயகத்தில் எதிர்ப்பை அடக்க நினைக்கும் எந்த முயற்சியும் பேச்சுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை நசுக்குவ தாகும். அரசுகள் எப்போதும் சரியானவை அல்ல. அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச விரோதிகள் அல்லர்.குடிமக்களின் உரிமைகளைப் பாது காக்கும்போதுதான் ஜனநாயகம் வெற்றி பெற்றது என்று கருத முடியும். எதிர்ப்பு, மாற்றுக்கருத்து என்பது ஜனநாயகத்தில் முக்கிய மானது. அதை அங்கீகரித்து, ஊக்குவிக்க வேண்டும். ஜனநாயகத்தின் உள்ளார்ந்த பகுதியே கேள்வி கேட்பதுதான். அமைதியான வழியில் போராட எல்லோருக்கும் உரிமை உண்டு. 

ஒரு கட்சி தேர்தலில் 51 சதவிகிதம் வாக்குகள் பெற்றுவிட்டால், மீதமுள்ள 49 சதவிகிதம் வாக்குகள் பெற்ற கட்சியினர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வாய்மூடி இருந்துவிட வேண்டும் என்பதல்ல. பெரும்பான்மைவாதம் என்பதே ஜனநாயகத்துக்கு எதிரான கூற்றுதான்.எப்போதெல்லாம் சித்தாந்தங்களுக்கு இடையே மோதல் ஏற்படுகிறதோ அப்போது எதிர்ப்பு உருவாகும். அதனடிப்படையில், அமைதியான முறையில் எத்தனை காலம் வேண்டுமானாலும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்த உரிமை உண்டு. அந்த நேரங்களில், ‘அரசை எதிர்ப்பது தேசவிரோதம்’ என்று முத்திரை குத்துவது ஜனநாயக இயக்கத்தை வேண்டுமென்றே முடக்கமுயல்வதாகும். ஒருவர் மீது தேசவிரோதவழக்கு சுமத்தப்பட்டால், அவருக்குஆதரவாக வாதிடமாட்டோம் என வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் போட்டதை நான்கண்டிக்கிறேன். இது சட்ட நெறிமுறைகளுக்கு விரோதமானதுசில நேரங்களில் சில தீர்ப்புகள் மீது எனக்கு உடன்பாடில்லை. அது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆனால், நான் தீர்ப்புவழங்கும் அமர்வில் இருந்து விட்டால், நீதியின் அடிப்படையில்தான் செயல்படுவேன். நீதித்துறை எப்போதும் அச்சமற்று, சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். எதிர்க்கவும், மாற்றுக்கருத்து கூறவும் உரிமைஇருக்கிறது, விமர்சிக்கக்கூட உரிமை இருக்கிறது. நீதித்துறையும் கூட விமர்சன த்துக்கு அப்பாற்பட்டது அல்ல. இவ்வாறு நீதிபதி தீபக் குப்தா பேசியுள்ளார்.

;