tamilnadu

img

தீக்கதிர் டாப் 4 செய்திகள்

தோற்றாலும் பதவி விலக மாட்டேன்...

தேர்தலுக்குப் பின் அதிகார மாற்றத்திற்கு ‘எளிதாக நான் ‘ஆமாம்’ என்று சொல்லிவிட முடியாது’ என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்கெனவே கூறியிருந்தார். இதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். தனக்கு நீண்டகாலமாகவே மெயில் வாக்குப்பதிவில் (mail-in voting) நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

                       *****************

‘விவசாயிகளின்  கடவுள் மோடி..!’

விவசாயிகள் மோடிக்கு எதிராக நாடு முழு வதும் போராடிவரும் நிலையில், ‘விவசாயிகளின் கடவுளாக பிரதமர் மோடி இருக்கிறார்’ என்றும் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் துதிபாடியுள்ளார். 3 வேளாண் மசோதாக்களும் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் என ‘அள்ளி’ விட்டுள்ளார்.

                       *****************

நாட்டில் கம்பெனி  ஆட்சியா நடக்கிறது..?

“மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள், ஆங்கிலேயர் களின் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியைப் பிரதிபலிப்பது போல் இருக்கிறது” என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார். ஒப்பந்த விவசாயம் மூலம் விவசாயிகள் கோடீஸ்வரர்களிடம் கட்டாய அடிமை ஆக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                       *****************

மண்டி எல்லையைத் தாண்டி விற்கலாம்..

வேளாண் பொருட் களுக்கு அரசு உத்தரவாதம் எங்கே? என்பது தான் விவசாயிகளின் கேள்வி. ஆனால் “விவசாயிகள் தங்கள் பொருட்களை மண்டியின் (கொள்முதல் நிலையங்கள்) எல்லைக்கு வெளியே (தனியாரிடம்) விற்க முடியும்..?” என்று வேளாண் அமைச்சர் தோமர் பதிலளித்துள்ளார்.

;