tamilnadu

img

தீக்கதிர் டாப் 4 தேசியச் செய்திகள்

பிராமணர்களுக்கு வீடு, மாதம் ரூ.ஆயிரம்...

மேற்குவங்கத்தில், 8 ஆயிரம் ஏழைப் பிராமணர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதற்கு அம்மாநில முதல் வர் மம்தா பானர்ஜி உத் தரவிட்டுள்ளார். மேலும் பிராமணர்களுக்கு வீடுகள் கட்டித் தரப் படும் என்றும் அறிவித்துள்ளார்.

                              **************

பிரச்சனைகளைப் பேச  அரசு மறுக்கிறது...

“கொரோனா ஒருஉலகளாவிய சூழ்நிலைஎன்றாலும் ஒரு அரசாங்கம் இந்த பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றுதேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரிய சுலேகூறியுள்ளார். மாறாக, மோடி அரசு பொருளாதாரம், வேலையின்மை சவால்கள் பற்றி விரிவாகப் பேசியதாக தெரியவில்லை என்றும் சுலே சாடியுள்ளார்.

                              **************

சோறூட்டும் கையையே கடிக்காதீர்கள்...

இந்தி சினிமா உலகில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக குற்றம் சாட்டிய பாஜக எம்.பி.யும் போஜ்புரி நடிகருமான ரவி கிருஷ்ணனுக்கு, மூத்த நடிகையும், சமாஜ்வாதி எம்.பி.யுமான ஜெயா பச்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். ரவியின் பேச்சு உணவு ஊட்டும் கையை (சினிமா துறையை) கடிப்பதற்கு இணையானது என்று குறிப்பிட்டுள்ளார்.

                              **************

கனத்த இதயத்தோடு  வெளியேறுகிறேன்...

மத்திய பாஜக அரசின் ஆதரவால் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்புடன் வலம்வந்த கங்கனா ரணாவத், திடீரென ‘மும்பையை விட்டு, கனத்தஇதயத்துடன் வெளியேறுகிறேன்’ என்று அறிவித்துள்ளார். அதேநேரம் “ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் மும்பையை ஒப்பிட்டது மிகவும் சரியானது என்றே இப்போதும் சொல்கிறேன்’’ என்று மீண்டும் முருங்கை மரம்ஏறியுள்ளார்.

;