tamilnadu

img

நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண ஒரே தீர்ப்பாயம்

புதுதில்லி:
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தில்லியில் நடைபெற்றது. அதில், நதிநீர் பங்கீடு செய்வது தொடர்பாக மாநில அரசுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க, பல தீர்ப்பாயங்கள் இருப்பதை மாற்றி, ஒரே தீர்ப்பாயத்தை அமைக்கும் சட்டத்திருத்த மசோதா
வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நதி நீர் பிரச்சனைகளை அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகளுக்குள் தீர்க்கவும் மசோதாவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தில்திருத்தம் செய்வதற்கான மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திருநங்கைகள் சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வியில் அதிகாரம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே மசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.ஊரகப் பகுதிகளில் சாலைவசதியை மேம்படுத்துவதற்காக பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு 80 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

;