tamilnadu

img

அமெரிக்காவில் தலைப்புச் செய்தியான இந்திய குடியுரிமைப் போராட்டம்... இந்து நாடாக்கும் முயற்சிக்கு எதிராக மக்கள் எழுச்சி

புதுதில்லி:
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, இந்தியா கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைக்கொடுத்து, போராடிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, ஜாமியா, அலிகார் பல்கலைக்கழக மாணவர் போராட்டமும், அவர்கள் மீதான கொடூரத் தாக்குதலும் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.அந்த வகையில், இந்தியாவில் நடைபெறும் குடியுரிமைச் சட்டத் திற்கு எதிரான போராட்டம், அமெரிக்கப் பத்திரிகைகளில் மிகப்பெரிய தலைப்புச் செய்தியாக இடம் பிடித் துள்ளன.ஒரு கேட்டுக்கு அந்த பக்கம் பெருவாரியான முஸ்லிம் மக்களும், இந்தபக்கம், போலீசாரும் நிற்கக் கூடிய ஒரு புகைப்படம் செய்தி ஏஜென்சி ஒன்றால் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம், அமெரிக்காவின் அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் முதல் பக்கத்தை பிடித்துள்ளது. ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, ‘திவாஷிங்டன் போஸ்ட்’, ‘தி நியூயார்க்டைம்ஸ்’ ஆகிய அமெரிக்காவின் மிக முக்கிய 3 நாளிதழ்களிலும், குடியுரிமைக்கு எதிரான போராட்டப் படங்கள் முதலிடத்தை பிடித்துள் ளன.அதிலும், ‘நியூயார்க் டைம்ஸ்’ தனது முதல்பக்கச் செய்திக்கு ‘இந்தியாவை இந்து நாடாக மாற்றும் மோடியின் முயற்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள்’ என்றுதலைப்பிட்டுள்ளது.‘தி நியூயார்க் டைம்ஸ்’ தனதுமற்றொரு செய்தியில், உலகிலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில்தான், அதிகமான அளவுக்கு, இணையதள சேவைகள் துண்டிப்பு நடப்பதாகவும் விமர்சித்துள்ளது.

இந்த வாரத்தில் மட்டும் சுமார் 60 மில்லியன் மக்கள், அதாவது ஒரு பிரான்ஸ் நாட்டின் அளவுக்கான மக்கள், இணையதள சேவையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை இந்தியாவில் ஏற்பட்டுத்தப்பட்டு உள்ளது என்றும் விரிவாக விளக்கியுள்ளது.இந்த வாரத்தில் மட்டும் சுமார் 60 மில்லியன் மக்கள், அதாவது ஒரு பிரான்ஸ் நாட்டின் அளவுக்கான மக்கள், இணையதள சேவையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றும் விரிவாக விளக்கியுள்ளது.

;