tamilnadu

img

5 ஆண்டு பாஜக ஆட்சியில் மக்களுக்குப் பேரழிவே மிச்சம் மோடி வளர்ச்சி... வளர்ச்சி என்றது முதலாளிகளின் வளர்ச்சியைத்தானா? சித்து விளாசல்

புதுதில்லி, ஏப்.7-

பிரதமர் மோடி கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிவதாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப்மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து சாடியுள்ளார். இதுதொடர்பாக ‘தி இந்து’ ஏட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:மக்களாட்சி என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி. ஆனால் தற்போது மத்தியில் பெரிய கார்ப்பரேட்டுகளின் ஆட்சிதான் நடக்கிறது. வளர்ச்சி வளர்ச்சி என்று கூறித்தான் மோடிவந்தார். ஆனால், இன்று யார்வளர்ந்திருக்கிறார்கள்? பெரியகார்ப்பரேட்கள்தான் செழிப்படைந்து இருக்கிறார்கள். விவசாயிகள், ஏழைகள் விரக்தியில் தள்ளப்பட்டுள்ளனர்.காங்கிரஸ் ஆட்சியில்தான் ஊழல், கறுப்புப் பணம், பயங்கரவாதம் அதிகரித்ததாக பாஜக கூறுகிறது. அப்படியானால், வங்கிக் கடன் மோசடிகளில் ஈடுபட்ட பெரியஇடத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியலை, ரிசர்வ் வங்கியின் முன்னாள்ஆளுநர் ரகுராம் ராஜன் அனுப்பினாரே.. அப்போது அவர்களின் பெயரை பாஜக அரசு வெளியிடுவதற்கு எது தடையாக இருந்தது?கறுப்புப் பணத்தை மீட்டு தலாரூ. 15 லட்சம் தருவேன் என்றுசொன்னது பிரதமர் மோடிதானே..


எவ்வளவு பணத்தை இதுவரைமீட்டுக் கொண்டு வந்திருக்கிறார் கள்?பயங்கரவாதம் பற்றி பாஜக பேச முடியுமா? 2014 முதல் 2018வரை ஜம்மு காஷ்மீரில் மட்டும் 1708 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. புல்வாமாவில், 250 கிலோ ஆர்டிஎக்ஸ் எங்கிருந்து வந்தது? ராணுவ வீரர்கள் வாகனம் நகர்ந்து கொண்டிருந்த போது குண்டு கண்டுபிடிப்பாளர்கள் எங்கிருந்தனர் என்றெல்லாம் பாஜக கூற முடியுமா?எங்கள் ஆட்சியில் ஊழலே நடக்கவில்லை என்றால், ரபேல்ஒப்பந்தத்தில் ஊழல் இல்லையா..ரபேலில் நடந்தது ஊழல் இல்லைஎன்றால் வேறு எது ஊழல்? எனவே, பாஜக கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு அடுத்தவர்கள் மேல் கல்லெறியக் கூடாது.பாஜக-வின் 5 ஆண்டுகால ஆட்சி ஒரு பேரழிவு. கடந்த 45ஆண்டுகளில் இல்லாத அளவுக்குவேலையின்மை தலைவிரித்தாடுகிறது. மத்திய அரசின் அமைப்பானஎன்.எஸ்.எஸ்.ஓ. தான் இதைக் கூறுகிறது. பணமதிப்பு நீக்கத்தையும், ஜிஎஸ்டி-யையும் வரலாற்று முடிவுகள் என்று விளம்பரப் படுத்திக் கொண்ட பாஜக இன்று, அதைச் சொல்லி வாக்கு கேட்க பயந்து கொண்டிருக்கிறது.இதுபற்றி யாராவது கேள்வி கேட்டால் அவர்களுக்கு ‘தேசவிரோதிகள்’ என்று பாஜக முத்திரை குத்துகிறது. சிபிஐ, ஆர்பிஐ,நீதித்துறை ஆகியவற்றை பாஜகசீரழித்து விட்டது. தற்போது ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது.

;