tamilnadu

img

சீன ஜனாதிபதிக்கு தமிழகம் உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி - ஜீ ஜின்பிங் இன்று கோவளத்தில் பேச்சு நடத்துகின்றனர்

சென்னை, அக். 11 பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்துவதற்காக தமிழகம் வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஜீ ஜின் பிங்கிற்கு சென்னையிலும், மாமல்லபுரத்திலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளியன்று மாலை மாமல்லபுரத்தில் இரு தலைவர்களும் சந்தித்தனர்.  ஜீ ஜின் பிங் - பிரதமர் மோடி இடையிலான  அலுவல்சாரா பேச்சுவார்த்தை கோவளத்தில் உள்ள தாஜ் பிஷ்ஷர்மென் கோவ் ஹோட்டலில் சனிக்கிழமை  (அக்.12) நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் எல்லைப்புற பிரச்சனை,இரு தரப்பு உறவுகள், வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெறக்கூடும் என்று வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரி வித்தன. இதனிடையே  சீன-இந்திய தலைவர் களின் சந்திப்பு குறித்து, இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வெய் தொங் செய்தியாளர் களுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக, இரு நாட்டு தலைவர்கள் எட்டியுள்ள முக்கியமான ஒத்த கருத்துக்கள் ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன என்றார்.

சீன-இந்திய உறவு, சீரான நிதான வளர்ச்சிப் பாதையில் நுழைந்துள்ளது. பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்பு, இரு நாட்டு உறவு வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றது.  சீன  நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்குச் சீனா ஊக்கமளித்து வருகிறது. மேலும் நியாயமான நட்புசார்ந்த வசதியான வணிகச் சூழலை இந்தியா வழங்க வேண்டும் என சீனா விரும்புவதாகவும்  அவர் கூறினார். சீன-இந்திய உறவு, உலக மற்றும் நெடு நோக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்களில் தொடர்பையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துவது, ஒன்றுக்கு ஒன்று வளர்ச்சியையும் பல தரப்புவாதத்தையும் பேணிக்காப்பது அவசியம் என்றும் சுன் வெய் தொங் கூறினார்.

வரலாற்று நிகழ்வு-ஊடகங்கள் பாராட்டு

இந்தியப் பிரதமர் மோடி - சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்  இடையிலான சந்திப்பு சென்னையின் வரலாற்று நிகழ்வாக மாறியுள்ளது என்று ஊடங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்த செய்தியை தேசிய சர்வதேச ஊடகங்கள் விரிவாக வெளியிட்டுள்ளன.

உற்சாக வரவேற்பு

முன்னதாக சென்னை வந்த சீன ஜனாதிபதி ஜீ ஜின் பிங்குக்கு விமான நிலையத்தில் உற்சாக மான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால்புரோகித், முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலர் சண்முகம் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் வரவேற்றனர். தமிழகத் தின் கிராமிய கலைகளான தப்பாட்டம். மயி லாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியத்துடன் விமானநிலையத்தில் வரவேற்பு அளிக்கப் பட்டது.  விமானத்தில் இருந்து இறங்கிய சீனத்தலைவர் தலைவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட பின்னர் காரில் ஏறும்முன்பு இந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.

பின்னர் காரில் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா விடுதிக்கு வருகை தந்தார். அப்போது அந்த விடுதியின் வாயிலில் இந்திய -  சீன மக்கள் இருநாடுகளின் தேசியக் கொடிகளு டன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாமல்லபுரம் பயணம்
பின்னர் சீன ஜனாதிபதி கிண்டியில் இருந்து அடையாறு வழியாக காரில் பழைய மகாபலி புரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் சென்றடைந்தார். வழி நெடுகிலும் அவருக்கு பொதுமக்களும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளும் இருநாடுகளின் கொடி களை அசைத்து வரவேற்பு அளித்தனர். மத்திய கைலாஷ், சோழிங்கநல்லூர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் தமிழகத்தின் பாரம்பரிய கலை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சி களோடு தமிழக அரசின்சார்பில் சீன ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜீ ஜின் பிங்கை பிரதமர் வரவேற்றார்

மாமல்லபுரத்தில் ஜீ ஜின் பிங்கை பிரதமர் நரேந்திரமோடி கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் இருவரும் அங்குள்ள பல்லவர் கால சிற்பங்களையும் பாறையில் குடை யப்பட்ட கலைநயமிக்க சிலைகளையும்  பார்வை யிட்டனர். அர்ஜூனன் தபசு,வெண்ணைக்கல், ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்டவற்றை ஜின் பிங் பார்த்து மிகவும் பரவசமடைந்தார். அந்த கற்சிற்பங்களின் சிறப்புகள் மற்றும் அதன் வரலாற்று சிறப்புகளை பிரதமர் மோடியும் அதிகாரிகளும் சீனத்தலைவருக்கு விளக்கினர். முன்னதாக  இரு தலைவர்களும் மாமல்ல புரத்தில் சிற்பங்களின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

வெண்ணை உருண்டை என்று சொல்லக் கூடிய பாறைக்கல்லை பார்த்து ஜின் பிங் அதி சயத்துப் போனார். அங்கும் இருவரும் கைகளை  உயர்த்திய படி  புகைப்படம் எடுத்துக்கொண்ட னர். சிறிது நேரம் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து இரு தலைவர்களும் உரையாடினர். அப்போது இருவருக்கும் இளநீர் வழங்கப் பட்டது.

நாட்டிய நிகழ்ச்சிகள்

பின்னர் மாமல்லபுரத்தில் தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் நடைபெற்ற தமிழக மற்றும் இந்திய நாட்டிய நிகழ்சிகளை ஜீ ஜின் பிங்கும் பிரதமர் மோடியும் கண்டு ரசித்தனர். பாரம்பரிய இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மின்னொளியில் ஜொலித்த மாமல்லபுரம்

இந்திய-சீன தலைவர்கள் வருகையை யொட்டி மாமல்லபுரம் முழுவதும் மின்னொளி யில் ஜொலித்தது. வழிநெடுகிலும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இனி வரவேற்பு என்றாலே அது தமிழகத்தில் இரு  தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டதே அதுதான் வரவேற்பு என்று சொல்லும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இரவு விருந்து

இந்தியா வந்துள்ள சீனத் தலைவரை வரவேற்று தாஜ் ஃபிஷர்மேன் கோவ் நட்சத்திர விடுதியில் பிரதமர் மோடி இரவுவிருந்தளித்தார். இதில் இருநாடுகளின் தலைவர்கள் தவிர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.விருந்தில் தென்னிந்தியாவின் இட்லி,தோசை, பொங்கல், வடை, தக்காளிரசம் போன்றவை முக்கியமாக இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பலத்த பாதுகாப்பு

இரு தலைவர்களின் வருகையை முன்னிட்டு சென்னையிலும் மாமல்லபுரத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பேச்சுவார்த்தை

சனிக்கிழமையன்று காலை 9. 50 மணியள வில் கோவளத்தில் உள்ள தாஜ் ஃபிஷர்மேன் கோவ் நட்சத்திர விடுதியில் நரேந்திர மோடியும் ஜீ ஜின்-பிங்கும் தனியே சந்தித்து உரை யாடுகின்றனர். காலை 10.50 மணியளவில் அதி காரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறு கிறது. 11.45 மணியளவில் சீன அதிபருக்கு மதிய விருந்து அளிக்கப்படுகிறது. அந்த விருந்தை முடித்துக்கொண்டு 12.30 மணியளவில் சென்னைக்குப் புறப்படும் சீன அதிபர், ஒன்ற ரை மணியளவில் சென்னை விமானநிலையத்தை வந்தடைவார். அங்கிருந்து அவர் சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.   

(ந.நி)

;