tamilnadu

img

மோடியை ஏற்காத தமிழ்நாடு, கேரளம்...

புதுதில்லி:
ஐஏஎன்எஸ் - சி.வோட்டர் நடத்திய சர்வே-யில், பிரதமர் நரேந்திர மோடியை நாடு முழுவதும் இப்போதும் 65 சதவிகித மக்கள் ஆதரிப்பதாக கூறப்பட்டுள்ளது.பிஜூ ஜனதாதளம் ஆட்சி நடத்தும் ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 95.6 சதவிகித மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இமாச்சலில் 93.95 சதவிகிதம், சத்தீஸ்கரில் 92.73 சதவிகிதம், ஆந்திராவில் 83.6 சதவிகிதம் என்ற அளவில் இந்த ஆதரவு உள்ளது.

ஆனால், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டும், கடந்த காலங்களைப் போலவே, இப்போதும் சுமார் 70 சதவிகிதம் மக்கள் பிரதமர் மோடியை நம்பத் தயாரில்லை என்று கூறியிருப்பதாக ஐஏஎன்எஸ் - சி. வோட்டர் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் 71.48 சதவிகிதம், வடகிழக்கு மாநிலங்களில் 69.45 சதவிகிதம், மேற்கு வங்கத்தில் 64.06 சதவிகிதம்; ஜம்மு - காஷ்மீரில் கூட 50.84 என்று மோடிக்கு இருக்கும் ஆதரவு, கேரளத்திற்கு வரும்போது அது 32.89 சதவிகிதம் என்றும், தமிழகத்தில் 32.15 சதவிகிதம் என்றும் குறைந்து விடுவதாக தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் கோவாவும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது.மேலும், இந்த 3 மாநிலங்களிலும், மோடியை விட ராகுல் காந்திக்கே அதிக செல்வாக்கு இருப்பதாகவும் சி.வோட்டர் கணித்துள்ளது. கோவாவில் 52.4 சதவிகிதத்தினரும், கேரளாவில் 46.87 சதவிகிதமும், தமிழகத்தில் 42.76 சதவிகிதத்தினரும் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

;