tamilnadu

img

இந்தியாவில் வெற்றிபெறும் ஜின்னாவின் கொள்கை.. சசி தரூர் எம்.பி. பேச்சு

புதுதில்லி:
சிஏஏ, என்பிஆர், என்சிஆர் போன்றவற்றால் இந்தியாவில் முகமது அலி ஜின்னாவின் கொள்கை வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசியுள்ளார்.ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் இதுதொடர்பாக அவர் மேலும் பேசியிருப்பதாவது:

இந்தியாவிலிருந்து ‘பாகிஸ் தான்’ என்ற தனிநாடு 1947-ஆம்ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதிபிறந்தது. இதற்கு காரணமாகவும், பாகிஸ்தான் என்னும் புதியநாட்டின் முதல் தலைமை ஆளுநராகவும் இருந்தவர் முகமது அலிஜின்னா.இந்தியாவின் சுதந்திரப் போர்காலத்தில் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கான தனி அமைப்பாக இந்திய முஸ்லீம் லீக் கட்சியை 1906-ஆம் ஆண்டு நிறுவியவரும் முகமது அலி ஜின்னாதான்.இவரது கொள்கைதான் தற்போது இந்தியாவில் வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறது. “தேசியவாதத்தின் அடிப்படைமதவாதம்” என்பதுதான் ஜின்னாவின் கொள்கை. தற்போது இந்தியாவிலும் அதுதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.“என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்ட பதிவேடுகளாலும், அமலுக்கு வரப்போகும் சிஏஏ-வாலும்ஜின்னாவின் கொள்கைதான் வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை காண முடிகிறது. எனினும் முழுமையாக வெற்றி பெற்று விட்டது என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், வெற்றி பெற்றுக்கொண்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இப்போதும் அதைச் சரிசெய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. காந்தி கனவுகண்ட தேசமா? அல்லது ஜின்னாவின் கொள்கை வழிப்பட்ட தேசமா? என்று தேர்வு செய்யும் வாய்ப்பும் இந்த தேசத்தின் முன்உள்ளது.” இவ்வாறு சசிதரூர் பேசியுள்ளார்.

;