tamilnadu

img

நிர்மலா சீதாராமனுக்கு எதிராக சுப்பிரமணியசாமி கொதிப்பு

புதுதில்லி:
புதிதாக, மத்திய நிதியமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சகத்தின் 12 உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து அதிரடி உத்தரவுஒன்றை பிறப்பித்தது, பாஜக-வுக்கு உள்ளேயே எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.

பெரும்பாலும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள், அதிகமாக சொத்துக்களை குவித்தவர்கள் மற்றும் பாலியல் அத்துமீறல் புகாரில் சிக்கியவர்கள் ஆகியோரையே,  விதி எண் 56-இன் கீழ் நிர்மலா சீதாராமன் வெளியேற்றி இருப்பதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆனால், மற்றவர்களை நீக்கியது இருக்கட்டும், பதினொன்றோடு பன்னிரண்டாக, வருமான வரித்துறை ஆணையர் ஸ்ரீவத்சவாவை எப்படி நீக்கலாம்? என்று பாஜக மூத்தத் தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி கொதித்துள்ளார்.

“என்.டி.டி.வி.யின் நிதி முறைகேடுகளை அம்பலப்படுத்தியவர் ஸ்ரீவத்சவா. இதனால், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தால் பொய்யான வழக்குகள் ஸ்ரீவத்சவா மீது போடப்பட்டன. அவற்றை அடிப்படையாக வைத்துத்தான் தற்போது ஸ்ரீவத்சவாவுக்கு கட்டாய ஓய்வுஅளித்துள்ளார் நிர்மலா சீதாராமன். எனவே,இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத இருக்கிறேன்” என்று ட்விட்டர்பக்கத்தில் சுப்பிரமணியசாமி ஆவேசம் அடைந்துள்ளார்.

இது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுப்பிரமணியசாமி கூறுவதுபோல, உண்மையிலேயே ஸ்ரீவத்சவா பாஜக-வுக்குநெருக்கமானவர்தான். பாஜக-வின் மோசடி களை அம்பலப்படுத்தி வந்த என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு எதிராகப் பாய்ந்து, “என்.டி.டி.வி.யின் முறைகேடுகள்” என்றதலைப்பில் ஒரு புத்தகத்தையே வெளியிட்டவர்.காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரத்திற்கு எதிரான பாஜகவின் அம்பாகவும் ஸ்ரீவத்சவாஇருந்து வந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்ட போது, வேட்புமனுவில் தவறான தகவல்களை அவர் தெரிவித்துள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியது இதே ஸ்ரீவத்சவாதான். 2019 மக்களவைத் தேர்தலிலும் சிவகங்கைக்கு வந்து சிதம்பரம் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி பரபரப்பை கிளப்பினார்.

இப்படிப்பட்ட ‘நம்ம ஆள் மீதே நடவடிக்கையா?’ என்று சுப்பிரமணியசாமி ஆவேசப்பட்டுள்ளார்.பெரும்பாலான பாஜக-வினருக்கு உரியஅங்கலட்சணங்களான நிதி மோசடி, பாலியல் புகார் உள்ளிட்ட பல வழக்குகள் ஸ்ரீவத்சவா மீதும் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

;