tamilnadu

img

உ.பியில் சுட்டுக் கொல்லப்பட்டோர் குடும்பத்தினருக்கு சுபாஷினி அலி நேரில் ஆறுதல்

புதுதில்லி, டிச.25- உத்தரபிரதேசத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான இளைஞர்களின் குடும்பத்தினரை கான்பூரில் சந்தித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி ஆறுதல் கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வெள்ளியன்று (டிச.20) நடந்த போராட்டத்தின் போது கொல்லப்பட்ட அஸ்லத்தின் தாயார் நஜ்மா  பானு, ரஹிஸின் தந்தை முகம்மது ஹரீப் ஆகி யோரை சுபாஷினி அலி நேரில் சந்தித்தார். அப்போது, மக்களின் போராட்டங்களை எத்தனை கொடூரமாக தாக்கினாலும் ஒடுக்கிவிட முடியாது என சுபாஷினி அலி தெரிவித்தார். கொல்லப்பட்ட அஸ்லமும், ரஹிஸும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அல்ல. இரு வரும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவ ர்கள். திருமண வீட்டில் உணவு சமைக்கும் பணி முடிந்து வீடு திரும்பும்போது ரஹிஸ் காவல்துறை யின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். கூலித் தொழிலாளியான அஸ்லம் கூலி வாங்குவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டவர். மிக அருகிலன் நின்று காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதாக இருவரும் மருத்துவமனையில் வைத்து குடும்பத் தினரிடம் தெரிவித்துள்ளனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டக் காரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படு கிறார்கள். உத்தரபிரதேசத்தில் மிக அதிகமானோர்  கொல்லப்பட்டனர். அசாமிலும் கர்நாடகத்திலும் சிலர் சுட்டு கொல்லப்பட்டனர். இதனிடையே சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க வந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் காவல்துறையினர் தடுத்ததால் திரும்பிசென்ற னர். அவர்கள் இருவரையும் துப்பாக்கிச்சூடு நடந்த மீரட் செல்ல காவல்துறையினர் அனுமதிக்க வில்லை. தங்களை தடுக்க உத்தரவு உள்ளதா எனவும், மூன்று பேருக்கு மேல் இல்லாததால் தடை  உத்தரவு மீறல் இல்லை எனவும் அப்போது ராகுல்காந்தி கூறினார். ஆனால் அதற்கு பதி லளிக்காமல் காவல்துறையினர் தங்களை திருப்பி அனுப்பிவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

;