tamilnadu

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம்: இடதுசாரிக் கட்சிகள் விளக்க அறிக்கை

புதுதில்லி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களை ஒவ்வொரு மாநிலத்திலும் எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து இடதுசாரிக் கட்சிகள் தெளிவுபடுத்தியுள்ளன.

இது தொடர்பாக ஜூன் 25 வியாழக்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவ பிரதா பிஸ்வாஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மோடி அரசாங்கம், நாள்தோறும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை உயர்த்திக் கொண்டிருப்பதைக் கண்டித்து அகில இந்திய எதிர்ப்பு நாள் அனுசரித்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் சார்பில் 2020 ஜூன் 22 அன்று அறைகூவல் விடுக்கப்பட்டது.கோவிட்-19 கொரோனா நுண்ணுயிரி தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் பல்வேறு விதங்களில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால், இவ்வாறு அகில இந்திய எதிர்ப்பு நாள் அனுசரிப்பது தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் தங்களுக்குள் கலந்துபேசி முடிவுசெய்து கொள்ள வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்திருக்கின்றன. இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் நாடு முழுதும் ஜூன் இறுதி வாரத்தில் நடந்திட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ந.நி.)

;