tamilnadu

img

கொரானோவிற்கு சுவீடனில் பலியான திருவில்லிபுத்தூர் வாலிபர்

விருதுநகர், மார்ச்.23- கொரோனா பாதிப்பால் சுவீடன் நாட்டில் உயிரிழந்த தனது மகனின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர வேண்டும். அங்கு சிகிச்சை பெற்று வரும் தனது மருமகள், பேரனை இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டுமென திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர்  விருதுநகர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தார். திருவில்லிபுத்தூர் கோட்டைப் பட்டி, தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் தங்க ராஜ். வட்டார வளர்ச்சி அலுவல ரான இவர் விருதுநகர் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது :  எனது மகன் ராஜேஷ்குமார்.  சுவீடன் நாட்டில் டிசைனிங் என்ஜினி யராக பணிபுரிந்து வந்தார்.  பிப்ரவரி 22-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக தகவல் வந்தது. எனது மருமகள் மற்றும் பேரன் அங்கு சிகிச்சையில் உள்ளனர். எனவே, எனது மகனின் உடலையும், மருமகள், பேரனையும் இந்தியாவிற்கு அழைத்து உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள் ளார். (ந.நி)