tamilnadu

img

வானில் தோன்றிய நெருப்பு வளைய சூரிய கிரகணம்

சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் நேராக வந்து, அதன் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது அதன் நிழல் சந்திரன் மீது விழுந்து சந்திர ஒளியை மறைத்தால் அது சந்திர கிரகணம். சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலா நாளிலும் வரும்.
சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்துவிட்டால் அது முழு சூரிய கிரகணம். சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து, சூரியன், நெருப்பு வளையமாக ) தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் எனப்படும். சூரியன் சந்திரனின் நிழலால் பகுதி சூரியன் மட்டும் மறைக்கப்பட்டால் அது பகுதி சூரிய கிரகணம். இன்று நடைபெறுவது அபூர்வ நெருப்பு வளைய சூரிய கிரகணம்.
இந்த ஆண்டின் கடைசி கிரகணமாக, டிசம்பர் 26ஆம் தேதியன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்னும் அரிய சூரிய கிரகண நிகழ்வு இன்று தோன்றியது. காலை 8 மணியளவில் கிரகணம் தொடங்கியது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பகுதி அளவில் தோன்ற தொடங்கியது. அதன்பின்னர் கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் சூரிய கிரகணம் தோன்றியது. சென்னையில் பகுதி அளவு தெரிந்தது.
சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்காக, மாநிலம் முழுவதும் சிறப்பு  ஏற்பாடுகளை தமிழ் நாடு அறிவியல் இயக்கம் செய்திருந்தது. சென்னையில் பிர்லா கோளரங்கம் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பகுதிகளுக்கு ஏராளமானோர் சென்று, சூரிய கண்ணாடி மூலமாக கிரகணத்தை பார்த்து ரசித்தனர். 
10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய நிகழ்வு தோன்றியது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அடுத்த சூரிய கிரகணம் 2031 மே 21-ந்தேதி நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;