tamilnadu

img

குடியுரிமைச் சட்ட நகலை கிழித்து ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ முழக்கம்!

போராட்டக்களமாகும் பட்டமளிப்பு விழாக்கள்

கொல்கத்தா, டிச.25- குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புதுவை பல்கலைக் கழகத்தில் பயி லும் கேரள மாணவி ரபீஹா, பட்ட மளிப்பு விழாவில் தமக்கு வழங்கப் பட்ட தங்கப் பதக்கத்தை, மேடை யிலேயே பெற மறுத்து, பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், மேற்குவங்க மாநி லம், ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவி தேப்ஸ்மிதா சவுத்ரியும், பட்ட மளிப்பு விழாவின்போது, குடியுரிமைச் சட்டத்திற்கான தனது எதிர்ப்பை பகி ரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.  தங்கப் பதக்கம் பெறுவதற்காக மேடையேறிய மாணவி தேப்ஸ்மிதா சவுத்ரி,  குடியுரிமை சட்ட திருத்தத்தை யும் என்.ஆர்.சி.யையும், தாம் எதிர்ப்பதாகவும் அரசிடம் எந்த ஒரு ஆவணத்தையும் தர முடியாது என்றும் அறிவித்துள்ளார்.  அத்துடன் தமது கையில் வைத்திருந்த குடியுரிமை சட்ட திருத்த நகலை விழா மேடையிலேயே கிழித்தெறிந்த அவர், ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற புரட்சிகர முழக்கத் தையும் எழுப்பியுள்ளார். இதேபோல, பட்டம் பெறுவ தற்கான அங்கிகளை அணிந்து வரி சையில் அமர்ந்திருந்த ஜாதவ்பூர் பல்க லைக்கழகத்தின் 25 மாணவர்கள், பெயர் வாசிக்கப்பட்டபோதும், மேடை க்குச் சென்று பட்டத்தைப் பெறாமல் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய் துள்ளனர். முன்னதாக, இதே பட்டமளிப்பு விழாவிற்கு வந்த மாநில ஆளுநர் ஜெக தீப் தன்கரை, மாணவர்கள் விழா மேடைக்கு செல்ல விடாமல் கறுப்புக் கொடியுடன் 2 மணி நேரம் முற்றுகைப் போராட்டம் நடத்தி, அவரை ஆளுநர் மாளிகைக்கே திருப்பி அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

;