கொரோனா தொற்று சோதனைக்கு தேசிய வைராலஜி நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ள கருவிகளையும் பயன்படுத்திட வேண்டும்
புதுதில்லி, மார்ச் 23- கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்து சோதனை செய்திட, தேசிய நச்சு உயிரியல் நிறுவனம் ஒப்பு தல் அளித்துள்ள கருவிகளையும் பயன்படுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, பிரத மருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப் பிட்டிருப்பதாவது: நாடும், நாட்டு மக்களும் கோவிட்- 19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராகக் கடும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பல மாநிலங்களில், இந்தக் கொடூர வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டி ருக்கின்றன. இவ்வாறான சமூக முடக்கத் தின்போது, மக்களை, குறிப்பாக, இதுதொடர்பாக அறிவிக்கப்பட்டி ருக்கிற அடையாளங்களைக் கொண்டி ருப்பவர்களை, இந்நோய் தொற்றி யிருக்கிறதா எனச் சோதித்துப் பார்ப்பது மிகவும் முக்கியமாகும். அந்த அடிப்படையில், இந்நோய் பீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அந்தப் பகுதிகளில் சமூக முடக்கத்தை வலுவாகச் செயல்படுத் திட வேண்டும்.
இது தொடர்பாக, தேசிய நச்சு உயிரி யல் நிறுவனம் (National Institute of Virology) ஒப்புதல் அளித்துள்ள அனைத்துச் சோதனைக் கருவி களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், மத்திய சுகா தார அமைச்சகம் சார்பில் வெளி யிடப்பட்டுள்ள சுற்றறிக்கையானது, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (US Food and Drug Administration) மற்றும் ஐரோப்பிய ஆணையம் (European EC) ஒப்புதல் அளித்துள்ள சோதனைக் கருவிகளை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருப்பது விசித்திரமாக இருக்கிறது. இது போன்ற சோதனைக் கருவிகளை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனம் நாட்டில் குஜராத்தில் உள்ள ஒரேயொரு தொழிற்சாலைதான் இருப்பதாக செய்திகள் சுட்டிக்காட்டு கின்றன. இப்போதுள்ள மிகவும் மோச மான நிலையில், இந்தச் சுற்றறிக்கை உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். தேசிய நச்சு உயிரியல் நிறு வனம் ஒப்புதல் அளித்துள்ள அனைத் துச் சோதனைக் கருவிகளையும் பயன்படுத்துவதற்கு அனுமதித்திட வேண்டும். இது மிகவும் அவசரம்.
ரூ.5000 தருக!
சமூக முடக்கத்தின் காரணமாக, தங்கள் குடும்ப ஜீவனத்திற்காக தினந்தோறும் உழைத்து வாழ்ந்து வந்த கோடிக்கணக்கான குடும்பங்கள் வேலை செய்ய வழியின்றி அவதிக் குள்ளாகி இருக்கின்றார்கள். இக்குடும்பங்களைச் சேர்ந்தவர் களுக்கு அவர்களுடைய ஜன்தன் கணக்குகளுக்கும், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பத்தினருக்கும் குறைந்தபட்சம் 5000 ரூபாய் உடனடியாக மாற்றப்பட வேண்டியது அவசியமாகும்.
மதிய உணவுத் திட்டத்தில் பயன டைந்து வந்த சிறுவர்களுக்குப் பயன் படுமாறு அவர்களுக்கான ரேஷன் பொருட்களை அவர்களின் இல்லத் திற்கு சென்று அளிக்கப்பட வேண் டும். உலகில் பல நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் தங்கள் நாட்டிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பெற்றுவந்த ஊதியத்தில் குறைந்த பட்சம் 80 சதவீதத்தை அவர்கள் இப்போது வேலைக்கு வர முடியாத நிலையிலும் அளிக்கப்படும் என்கிற உத்தரவாதத்தை அறிவித்திருக் கின்றன. இந்திய அரசாங்கமும் அதைப்போன்றே செய்திட வேண்டும். அத்துடன், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்களுக்கும், சில்லரை வர்த்தகர்களுக்கும் மற்றும் இஎம்ஐ என்கிற மாதாந்திர கடன் தவ ணைகளுக்கும் ஓராண்டு காலத்திற்கு கால நீட்டிப்பு (moratorium) வழங்கிட வேண்டும்.
இப்போது நிதிச் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டிருப்பதால், மத்திய அரசாங்கம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்களுக்கான கணிசமான தொகுப்புக்கான தனி நிதி யங்களை ஒதுக்கி வைக்க வேண்டும். நம்முடைய வள ஆதாரங்களை மக்களைப் பாதுகாப்பதற்காகப் பயன் படுத்துவதற்கு இதுவே தருணம். அதனை அரசு தனது நிதிநிலையை சரி செய்து கொள்வதற்காக பயன் படுத்தக்கூடாது. இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
(ந.நி.)