tamilnadu

img

ஒற்றை ஆட்சியே ஆர்எஸ்எஸ் திட்டம்

அமித்ஷாவின் பேச்சுக்கு சீத்தாராம் யெச்சூரி கண்டனம்

புதுதில்லி, செப்.18- பல கட்சி ஜனநாயக முறைக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது, ஒவ்வொரு நாளும் மத்திய ஆட்சியாளர்களால் நடத்தப்பட்டு வரும் ஜனநாயக படுகொலைகளின் மற்றொரு பிரகடனம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சாடியுள்ளார். மோடி அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில நாட்களாக இந்தி யாவின் ஒற்றுமையையும், ஒருமைப் பாட்டையும் சீர்குலைக்கும் வகையில் அடா வடியான கருத்துக்களை வெளியிட்டு வரு கிறார். இந்தியாவின் அடையாளம் இந்தி மொழி மட்டுமே என்றும், இந்தி மட்டுமே தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்றும் கூறிய அவர், செவ்வாயன்று தில்லி யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், இந்தியாவின் பல கட்சி ஜன நாயக முறைக்கு எதிராக கருத்து தெரி வித்தார். பல கட்சி ஜனநாயக முறை தோல்வி யடைந்துவிட்டதாகவும், அதனால் நன்மை ஏற்பட்டதா என மக்களுக்கு சந்தேகம் வந்து விட்டதாகவும் அவர் கூறியது, நடைமுறை யில் உள்ள நாடாளுமன்ற ஜனநாயக கட்ட மைப்பை தகர்த்தெறிந்துவிட்டு, இந்துத் துவா ராஜ்ஜியம் எனும் ஒற்றை ஆட்சியை திணிப்பதற்கான தங்களது உள்ளக் கிடக் கையை வெளிப்படுத்துவதே ஆகும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சீத்தாராம் யெச்சூரி

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி, “நமது மதச்சார்பற்ற ஜன நாயக குடியரசு எனும் மாபெரும் கட்ட மைப்பை மாற்றி, அந்த இடத்தில் பாசிச இந்துத்துவா ராஷ்டிரத்தை நிறுவுவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படை திட்டம். இத்தகைய திட்டத்தை செயல் படுத்துவதையே அமித்ஷாவின் பேச்சு பிரகடனம் செய்கிறது. இது அவர்கள் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்துகிற தொடர் படுகொலைகளில் ஒன்று. நமது அர சியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கோட்பாடுகளையும், மாண்புகளையும் படுகொலை செய்வதாகும். இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக நமது போராட் டங்களை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது” என்று கூறியுள்ளார்.
 

;