tamilnadu

img

ராமர் கோயில் கட்டுமான இடத்தில் சிவன் - சிலைகள் கண்டெடுப்பு....

அயோத்தி:
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பாபர் மசூதி, கடந்த1992-ஆம் ஆண்டு, சங்-பரிவார அமைப்புக்களால் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது.“இங்கிருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டப் பட்டது; எனவே, மசூதியை இடித்துவிட்டு, மீண்டும் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்” என்று கூறி, இந்த அராஜகத்தில் ஈடுபட்டனர்.அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றமும் தற்போது அனுமதி வழங்கியதால், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நிலத்தை சமப்படுத்தும் பணிகள் அண்மையில் துவங்கின.

இந்நிலையில், சமப்படுத்தும் பணியின்போது நிலத்திற்குள் இருந்து 5 அடி உயரத்தில் சிவலிங்கம், 7 கருப்புத்தூண்கள், 6 செம்மணற்கல் தூண்கள் மற்றும் சில தெய்வங்கள், பெண் தெய்வங்களின் உடைந்த சிலைகள் ஆகியவை கிடைத்துள்ளன.ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகமே, அந்தப் பொருட்களின் படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள் ளது. இதனிடையே, இந்து கோயிலுக்குமுன்பு, புத்த விகார்கள், ஸ்தூபிகள் இருந்ததற்கான தடயங்களும் கிடைக்கலாம் என்று புத்த மதத்தைச் சேர்ந்தவினீத் மவுரியா என்பவர் கூறியுள்ளார். மேலும், பெரிய இயந்திரங்கள் மூலம் பணிகளை மேற்கொண்டால், அந்த தடயங்கள் அழிந்து போக வாய்ப்பிருப்பதாக கூறியுள்ள வினீத் மவுரியா, இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

;