tamilnadu

img

சென்செக்ஸ் 14 நாட்களில் 3,300 புள்ளிகள் சரிவு... ரூ. 13 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

புதுதில்லி:
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ், தொடர் சரிவைக் கண்டுவரும் நிலையில், முதலீட்டாளர்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பைச் சந்தித்துள்ளனர்.சென்செக்ஸ், கடந்த பிப்ரவரி 13 அன்று 41 ஆயிரத்து 709 புள்ளிகள் என்ற உச்சத்தில் இருந்தது. ஆனால், அதற்குப் பிந்தைய 14 நாட்களில் சுமார் 3 ஆயிரத்து 300புள்ளிகள் அளவிற்கு சரிந்து,முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குஉள்ளாக்கியது. புதன்கிழமை யன்று வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 38 ஆயிரத்து 409 புள்ளிகளில் நிலைபெற்றது.

இதேபோல தேசிய பங்குச்சந்தையான ‘நிப்டி’, செவ்வாய்க் கிழமையன்று மாலை 11 ஆயிரத்து 303 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுஅடைந்திருந்தது.  இந்நிலையில், புதனன்று மேலும் 52 புள்ளிகள் சரிந்து, 11 ஆயிரத்து 251 புள்ளிகளுக்கு போனது. இந்தியாவின் மொத்தஉள்நாட்டு உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டு வருவதும், கொரோனா  வைரஸ் தாக்கமும்  பங்குச்சந்தை  சரிவுக்கு முக்கியக்காரணமாக கூறப்படுகிறது.

;