tamilnadu

img

முகநூலில் அங்கி தாஸ் மூலம் நடந்த மதவெறிப் பிரச்சாரம்... மார்க் ஜூக்கர் பெர்க்கிற்கு காங்கிரஸ் கடிதம்

புதுதில்லி:
அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட்ஜர்னல்’ நாளேடு, கடந்த ஆகஸ்ட்14 அன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில், இந்திய ஆளும் கட்சியான பாஜகவினரும், ஆர்எஸ்எஸ்அமைப்பைச் சேர்ந்தவர்களும், முகநூலில் மத அடிப்படையிலான வெறுப்பு மற்றும் வன்முறைப் பிரச்சாரங்கள் மேற்கொள்வதை வேண்டுமென்றே முகநூல் நிர்வாகம் தடுப்பதில்லை; புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறியிருந்தது.

இதன் பின்னணியில் ‘முகநூல்இந்தியா’வின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பொதுக் கொள்கை இயக்குநர் அங்கி தாஸ்இருப்பதாக அதிரடியான குற்றச் சாட்டுக்களை வைத்ததுடன், தில்லிபாஜக தலைவர் கபில் மிஸ்ரா, கர்நாடகத்தைச் சேர்ந்த அனந்தகுமார் ஹெக்டே, தெலுங்கானாவைச் சேர்ந்த ராஜா சிங் ஆகியோரின் வெறுப்புப் பேச்சுக்கள் தொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டது.பாஜகவுக்கு ஆதரவான முகநூல் நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகள் பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நாடாளுமன்ற குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.இந்நிலையில், முகநூல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர் பெர்கிற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார்.அதில், ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’நாளேடு கடந்த 14-ம் தேதி வெளியிட்ட செய்தியில் ஒன்றும் வியப் பாக இல்லை. ஏனெனில், 2014-ஆம்ஆண்டிலிருந்து முகநூல் நிர்வாகம் வெறுப்புப் பேச்சுகளை அனுமதித்து வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக நடைமுறையில் முகநூல் நிறுவனம் தலையிடுவதை மிகவும் கவலைக்குரிய விஷயமாகவே காங்கிரஸ் பார்க்கிறது. மற்றகட்சிகள் அஞ்சுவதைப் போல் காங்கிரஸ் கட்சியும் அஞ்சுகிறது.எனவே, முகநூல் நிர்வாகம்,தனது இந்தியா தலைமைக் குழு மீது உயர்மட்ட விசாரணைநடத்த வேண்டும், எந்த விதத்திலும் இந்திய ஜனநாயகத்தில் குறுக்கிடாத வகையில் புதிய முகநூல் குழுவை இந்தியாவுக்கு நியமிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

;