tamilnadu

img

‘பொருளாதார மேதை’ சுப்பிரமணியசாமி சொல்கிறார் லட்சுமி படத்தைப் போட்டால் ரூபாய் மதிப்பு உயருமாம்..

புதுதில்லி, ஜன.16- “பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகிய இரு வருக்குமே பொருளாதாரம் தெரி யாது” என்று பேசிவருபவர் சுப்பிர மணியசாமி.  பாஜக மூத்த தலைவரான இவர், புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் படித்த வர்; பின்னர் அந்த பல்கலைக்கழ கத்திலேயே பேராசிரியர் பணியாற் றியவர்; அத்துடன் ஜனதா ஆட்சி யின் போது மத்திய அமைச்சராக வும் இருந்தவர் என்பதால், பொரு ளாதாரம் குறித்த சுப்பிரமணியசாமி யின் கருத்துக்களை பலரும் உன் னிப்பாக கவனிப்பார்கள். சுப்பிர மணியசாமியை ஒரு ‘பொருளாதார மேதை’ என்ற அளவிற்கு புகழ்பவர் களும் உண்டு. அப்படிப்பட்ட ‘பொருளாதார மேதை’, மத்தியப்பிரதேசத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசுகை யில், “இந்திய ரூபாயின் மதிப்பு உய ருவதற்கு, ரூபாய் நோட்டில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட வேண் டும்” என்று கூறி, தனது மேதாவிலா சத்தின் லட்சணத்தை அவராகவே போட்டு உடைத்துள்ளார். “இந்தோனேசியாவில், அவர் களுடைய பணத்தாளில் வினை களைத் தீர்க்கும் விநாயகர் படத்தை அச்சிட்டுள்ளனர்; அதுபோல நாமும் நம்முடைய ரூபாய் நோட்டில் வளங் களை அள்ளித்தரும் லட்சுமி தேவி யின் படத்தை அச்சிட்டால், நம் இந் திய நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொரு ளாதார பின்னடைவு நீங்கி, ரூபாய் நோட்டின் மதிப்பு உயரும்” என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். “இவ்விஷயத்தில் பிரதமர் மோடி நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என்றும் வெகு தீவிரமாக அவர் பேட்டி அளித்துள்ளார். இதனைக்கேட்டு சுப்பிரமணிய சாமியின் பொருளாதாரத்துறை நண்பர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள் ளனர்.

;