tamilnadu

img

சந்தீபும், சொப்னாவும் தப்பிச் செல்ல உதவியது கர்நாடகா அரசின் சேவா சிந்து இணையதளம்....

மங்களூரு:
தங்க கடத்தில் வழக்கில் குற்றவாளிகளான சந்தீப் நாயரும், சொப்னா சுரேஷும் கர்நாடகாவுக்கு தப்பிச்செல்ல சேவா சிந்து இணையத்தில் பதிவு செய்ததோடு பாஜக தலைவர்களும் உதவியைதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.கர்நாடக அரசின் அதிகாரபூர்வ இணையதளமான சேவா சிந்துவில் பதிவு செய்து இவர்கள் பெங்களூரு தப்பிச் சென்றுள்ளனர். பதிவு செய்து வருகிறவர்களின் விவரங்கள் எல்லையில் சோதனை செய்து கர்நாடக காவல்துறையினர் கடத்தி விடுகிறார்கள். என்ஐஏ உட்பட தேடிவரும் குற்றவாளிகள் குறித்த துல்லியமான விவரங்கள் கர்நாடக காவல்துறையிடம் கிடைத்த பிறகும் அவர்கள் எல்லையை கடந்து செல்ல பாஜக தலைவர்களின் தொடர்பு உதவியதாக தெரிய வந்துள்ளது.  

கர்நாடக அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தும் கேரளாவைச் சேர்ந்த பாஜக தலைவர் எல்லையைக் கடத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஊடகங்களில் பிரபலமானதால் அவர்கள் எல்லையில் பிடிபட்டனர். ஆனால், கர்நாடக காவல்துறையில் செல்வாக்குள்ள பாஜக தலைவர்கள் தலையிட்டு கடத்தி விட்டுள்ளனர். மூன்று நாட்களுக்கு முன்பு, பெங்களுருவில் உள்ள ஒரு முகவரியை இவர்கள் போர்ட்டலில் பதிவு செய்ய பயன்படுத்தியுள்ளனர். விசாரண அதிகாரிகளை திசை திருப்ப வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டு தலைமறைவை தொடர திட்டமிட்டிருந்தனர். சனியன்றுதான் பெங்களூருகோரமங்களாவில் உள்ள ஆக்டாவ் ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். புக்கிங் டாட் காம் என்கிற இணையதளம் மூலம் சந்தீப்தான் அறையை பதிவு செய்துள்ளார்.மத்திய அரசின் உத்தரவுப்படி ஒரு மாநிலத்தை விட்டு வெளியே செல்ல பாஸ் வேண்டியதில்லை. ஆனால், செல்லவேண்டிய மாநிலத்தின் பாஸ் அல்லதுபதிவு தேவை. அதன்படியே இவர்கள் சேவா சிந்துவில் பதிவு செய்து கர்நாடகம் சென்றுள்ளனர். 

;