tamilnadu

img

டாலருக்கு ‘செக்’ வைக்கும் ரஷ்ய – சீன நாடுகள்... அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம்

புதுதில்லி:
ரஷ்ய - சீன நாடுகள், தங்களுக்கு இடையே, டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை சரிபாதியாக குறைத்து, அமெரிக்காவுக்கு அதிர்ச்சியளித்துள்ளன.நம்பகமான- எளிதில் வீழ்ச்சியடையாத நாணய மதிப்பைக் கொண்டதாக அமெரிக்க டாலர்பார்க்கப்படுகிறது. இதனாலேயே சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பொதுவாக இது இரண்டாவது உலகப்போருக்கு பின்னர்உருவான நிலையாக இருந்தாலும், 1973-இல் ‘ஒபெக்’ நாடுகள், எண்ணெய் வர்த்தகத்தை டாலரின் அடிப்படையில் நடத்ததுவங்கியது முதல், அமெரிக்கடாலரின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கத் துவங்கியது. பிறநாடுகள் மீது பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்தவும் அமெரிக்காவுக்கு டாலர் பயன் பட்டு வருகிறது. தற்போது டாலருக்கு மாற்றாக யூரோ முன்னிறுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், இரண்டு மிகப்பெரிய நாடுகளான ரஷ்யாவும் சீனாவும் தங்களுக்கு இடையிலான வர்த்தகத்தில், அமெரிக்க டாலர் பயன்பாட்டை 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைத்து, டாலரின் ஆதிக்கத் திற்கு ‘செக்’ வைத்துள்ளன.2015 ஆண்டுவாக்கில் ரஷ்ய -சீன வர்த்தகம், 90 சதவிகிதத் திற்கும் அதிகமாக, அமெரிக்க டாலர் அடிப்படையிலேயே நடைபெற்றது. ஆனால், ரஷ்யநாட்டின் மத்திய வங்கி அண் மையில் வெளியிட்டுள்ள தகவல்கள் படி, 2020-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ரஷ்யா - சீனா இடையே அமெரிக்க டாலர் அடிப்படையிலான வர்த்தகம் 46 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. 24 சதவிகித வர்த்தகம், ரஷ்யாவின்ரூபிள் மற்றும் சீனாவின் யுவான்நாணய மதிப்பிலும், 30 சதவிகிதவர்த்தகம் யூரோவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுஅமெரிக்காவுக்கு அதிர்ச்சியைஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

;