tamilnadu

img

மோடி அரசின் மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தம்

புதுதில்லி:
இந்திய விமானப்படைக்கு புதிதாக 114 விமானங்களை வாங்கு வதற்கு முடிவு செய்துள்ள மோடி அரசு, சர்வதேச அளவில் டெண்டர் அறிவித்துள்ளது.

மொத்தம் 15 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 1 லட்சத்து 28 ஆயிரம் கோடி) மதிப்பு கொண்ட இந்த ஒப்பந்தம், தற்போதைய நிலையில், உலகிலேயே மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.அண்மையில் நடைபெற்ற பாலகோட் தாக்குதலையொட்டி, இந்திய விமானப்படையின், மிகப்பழைய ‘மிக் 21’ ரக விமானத்தை, தனது ‘எப்.-16’ ரக விமானம் மூலம் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது.அந்த வகையில், இந்தியவிமானப்படையில் பயன்படுத்தப் பட்டு வரும், மிக் 21 போன்ற பழைய ரக விமானங்களுக்குப் பதிலாகவே, இந்த புதிய விமானங்களை வாங்கி, ராணுவத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரி விக்கின்றன. இதற்காகவே சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

போயிங், லாக்ஹீட் மார்ட்டின் கார்ப்பொரேசன், ஸ்வீடன் நாட்டின்சாப் ஏபி ஆகிய முக்கிய உலகளா விய நிறுவனங்கள், முதற்கட்டமாக இந்த ஒப்பந்தத்தில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.இந்த ஒப்பந்தத்தின்படி, 85 சதவிகித தயாரிப்புப் பணிகள், இந்தியாவில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தனது முதல் ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில், புதிய ஆயுதக் கொள்முதல் எதையும் மேற்கொள்ளாத மோடி அரசு, தற்போது 114  போர் விமா னங்களுக்காக, சுமார் ரூ. 1 லட்சத்து 28 ஆயிரம் கோடியை செலவிட முடிவு செய்துள்ளது.

;