tamilnadu

img

ரூ. 6 ஆயிரம் நிதி 5 கோடி பேருக்கு கிடைக்கவில்லை..!

வெற்று ஜம்பமான மோடியின் அறிவிப்பு

புதுதில்லி, பிப்.6- ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான்’ என்ற பெய ரில் மோடி அறிவித்த விவசாயிகளுக்கான நிதி யுதவித் திட்டமானது, ஓராண்டாகியும் இன்னும் முழுமையாக விவசாயிகளை சென்றடைய வில்லை என்று மத்திய அரசு ஒப்புக் கொண் டுள்ளது. 5 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளை இத்திட்டம் இன்னும் எட்டிக்கூட பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளது. 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயி ரம் நிதியுதவி வழங்கும் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா’ என்ற விவசாய நிதி யுதவித் திட்டம் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய மோடி அரசால் அறிவிக்கப்பட்டது. இத் திட்டத்தின் கீழ், மூன்று தவணைகளாக ரூ. 2 ஆயி ரம் விகிதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கு களில் செலுத்தப்படும்.

ஆனால், இத்திட்டம் முறையாக விவசாயி களைச் சென்றடையவில்லை; விவசாயிகள் பல ருக்கு வங்கிக் கணக்கில் பணம் சென்றுசேர வில்லை என புகார்கள் இருந்து வருகின்றன. ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படுவதே இதற்குக் காரணம் என்றும் விவசாயிகள் கூறி வந்தனர். டிசம்பர் மாதம் அமலுக்கு வந்த இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை யும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில், இத்திட்டத்துக் கான முதல் தவணை நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்ட தவணையில் 2.51 கோடி விவசாயிகளுக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லை என்று அரசு தரப்பே அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதோடு, மூன்றாம் கட்டத் தவ ணையில் 5.16 கோடி விவசாயிகளுக்கு இன்னும் பணம் வழங்கப்படவில்லை. 2018 டிசம்பர் முதல் 2019 நவம்பர் வரையில் இத்திட்டத்தின் கீழ் 9 கோடிக்கு மேலான விவசாயி கள் பதிவுசெய்துள்ளனர். ஆனால் 7.62 கோடி விவ சாயிகளுக்கு மட்டுமே முதல் தவணைப் பணமே கிடைத்துள்ளது. அதாவது பதிவு செய்த விவசாயி களில் 84 சதவிகிதப் பேர் மட்டுமே பயன்பெற்றுள்ள னர். ஆனால், இது இரண்டாம் கட்ட தவணை யில் 6 கோடியே 50 லட்சம் பேர்களாக குறையத் துவங்கி, மூன்றாம் கட்ட தவணையில் 3 கோடியே 85 லட்சம் பேருக்கு மட்டுமே பணம் செலுத்தப் பட்டுள்ளது.