tamilnadu

img

ரூ. 350 கோடியுடன் கனடாவுக்கு பஞ்சாப் தொழிலதிபர் ஓட்டம்;...

புதுதில்லி:
கடன் வாங்கிய ரூ. 350 கோடியைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று பஞ்சாப் தொழிலதிபர் மஞ்சித் சிங் மக்னி மீது வங்கிகள் புகார் அளித்துள்ளன.

அதாவது, தொழிலதிபர் மஞ்சித் சிங் மக்னி, கனடாவில் செட்டிலாகி 2 ஆண்டுகள்ஆகிவிட்ட நிலையில், கனரா வங்கி உள்ளிட்ட 6 வங்கிகள், மத்தியப் புலனாய்வுக்கழகத்திடம் புகாரைத் தூக்கிக் கொண்டு ஓடியுள்ளனர்.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது பஞ்சாப் பாஸ்மதி ரைஸ் லிமிடெட் நிறுவனம். இதன் இயக்குநர் மஞ்சித் சிங் மக்னி. மஞ்சித் சிங் மக்னியின் மகன் குல்வீந்தர் சிங்மக்னி, மருமகள் ஜஸ்மீத் கவுர் உள்ளிட்டோர்இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்தனர்.இவர்கள் அனைவரும் கூட்டாக, கனரா வங்கியில் ரூ. 175 கோடி, ஆந்திரா வங்கியில் ரூ. 53 கோடி, யூபிஎஸ்-இல் ரூ. 44 கோடி,ஓபிசி-யில் ரூ. 25 கோடி, ஐடிபிஐ-யில் ரூ. 14 கோடி, யூகோ வங்கியில் ரூ. 41 கோடி எனமொத்தம் ரூ. 350 கோடி கடன் வாங்கியுள்ள னர். ஆனால், 2003-ஆண்டு முதல் வாங்கப்பட்ட இந்த கடன்கள் எதனையும் மஞ்சித் சிங் மக்னி குடும்பம் திருப்பிச் செலுத்த  வில்லை. இதுதொடர்பாக 2019-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் முறையிட்டுள்ளன. ரிசர்வ் வங்கி, சிபிஐ அதிகாரிகளிடம் புகார் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.எனினும், சுமார் 15 மாதங்களுக்கு பிறகே, வங்கிகள் தற்போது சிபிஐ அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

;