திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 22ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் முதல் தவணையாக மொத்தம் 1258 தீக்கதிர் சந்தாக்கள் சேர்க்கப்பட்டு ரூ.19 லட்சத்து 24 ஆயிரத்து 600 சந்தா தொகை ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர் குமார் நகர் சுப்பராயக் கவுண்டர் திருமண மண்டபத்தில் ஞாயிறன்று தோழர் கே.தங்கவேல் படத் திறப்பு, நினைவு மலர் வெளியீடு மற்றும் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் பெறப்பட்ட சந்தா தொகையை கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரனிடம் ஒப்படைத்தார். இதில் 10 ஆண்டு சந்தா 4, ஐந்தாண்டு சந்தா 15, ஓராண்டு சந்தா 1134 மற்றும் 6 மாத சந்தா 107 என மொத்தம் 1,258 சந்தாக்கள் முதல் தவணையாக சேர்க்கப்பட்டன. இதற்கான தொகை ரூ.19 லட்சத்து 24 ஆயிரத்து 600-ஐ மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பெற்றுக் கொண்டார்.