புதுதில்லி, ஜூன் 23- ரிக் நாடுகளின் (ரஷ்யா, இந்தியா, சீனா) வெளியுற வுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக ஜூன் 23 செவ்வாயன்று நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று ஆலோசனை நடத்தி னார். அவர் பேசுகையில், உலகின் முன்னணி குரல்கள் ஒவ்வொரு வகையிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். சர்வதேச சட்ட த்தை மதித்தல், கூட்டாளிகளின் நியாயமான ஆர்வத்தை அங்கீ கரித்தல், பலதரப்பு வாதத்தை ஆதரித்தல் மற்றும் பொதுவான நன்மைகளை ஊக்குவித்தல் ஆகி யவை நீடித்த உலக ஒழுங்கை உருவாக்குவதற்கான ஒரே வழி. இந்த சிறப்புக் கூட்டம், சர்வதேச உறவுகளுக்கான வலுவான கொள்கையில் இந்தியாவின் நம்பிக்கையை மீண்டும் வலி யுறுத்துவதாக தெரிவித்தார்.