tamilnadu

img

தொழிலாளர் சட்டங்களை நீர்க்கச் செய்யும் மோடியின் முயற்சியால் கவலை....

புதுதில்லி:
மத்திய அரசு பல மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்வது குறித்து “ஆழ்ந்த கவலையை” வெளிப்படுத்தி யுள்ளது சர்வதேச தொழிலாளர் (ஐஎல்ஓ) அமைப்பு. நாட்டின் சர்வதேச கடமைகளை நிலைநிறுத்த “தெளிவான விளக்கம்” அனுப்புமாறு வற்புறுத்தியுள்ளது.தொழிலாளர் சட்டம் மற்றும் சர்வதேச தொழிலாளர் சட்டங்களை சில மாநிலங்கள் திருத்தமுயற்சிக்கும் நிலையில்,  தொழி லாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி ஐஎல்ஓவிற்கு  பத்து மத்தியதொழிற்சங்கங்கள் கடிதம் எழுதி யிருந்தன. இந்தக் கடிதத்தை தொடர்ந்தே   ஐ.எல்.ஓ மோடி அர சிடம் தெளிவான விளக்கத்தைக் கேட்டுள்ளது.

எட்டு எதிர்க்கட்சிகள், தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்க ளைச் செய்ய கொரோனா தொற்றை  ஒரு சாக்காக மத்தியஅரசு பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டி குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்துக்கு கடிதமும் எழுதியுள்ளனர்.இந்த நிலையில் நாட்டின் சர்வதேசக் கடமைகளை நிலைநிறுத்தவும், பயனுள்ள  பேச்சுவார்த்தை களை ஊக்குவிக்கவும் பிரதமர் மோடி “தெளிவான விளக்கத்தை” அனுப்ப வேண்டும் என்று ஐஎல்ஓஇயக்குநர் கேட்டுக்கொண்டுள் ளார்.தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் மோடியின் முயற்சிக்கு எதிராக சிஐடியு,ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ்,ஏஐயூடியூசி, டியூசிசி, எஸ்இ டபிள்யுஏ, ஏஐசிசிடியு, எல்பிஎப், யூசியுசி ஆகிய பத்து மத்திய தொழிற்சங்கங்கள் மே 14 அன்று ஐ.எல்.ஓவை அணுகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

;