tamilnadu

img

தில்லி குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி .... கேரளா, மேற்குவங்கம் உட்பட 16 மாநிலங்களுக்கு அனுமதி மறுப்பு

புதுதில்லி:
குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள, கேரளா, மேற்குவங்கம் உள் ளிட்ட 16 மாநிலங்களுக்கு மோடி அரசு அனுமதி மறுத்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று, தலைநகர் தில்லியில் குடியரசு தினஅணிவகுப்பு நடைபெறுவதுவழக்கம். இந்தியாவின் வேறுபட்ட கலாச்சாரக்கூறுகளை விளக்கும் விதமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் கண்காட்சி வாகனங்கள் இந்த அணிவகுப் பில் பங்கேற்கும். அதாவது,இந்தியாவின் “வேற்றுமையில் ஒற்றுமை” என்னும் பண்பை விளக்கும் வகையில் இந்த அணிவகுப்பு ஏற் பாடுகள் அமைந்திருக்கும்.ஆனால், இந்த ஆண்டுக் கான அணிவகுப்பில் கலந்துகொள்ள கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 16 மாநிலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவிற்காக, இந்தியாவின் 29 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 24 அமைச்சகங்கள் என மொத்தம் 56 அணிவகுப்பு ஊர்திகளுக் கான மாதிரிகள் சமர்ப்பிக் கப்பட்டு இருந்தன. அதில் 16மாநிலங்கள், 6 அமைச்சகங்கள் உட்பட 22 மாதிரிகள்தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.இவற்றில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங் கானா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், உத்தர்கண்ட், ஒடிசா,ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய 11 மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள் ஆகும்.

;