tamilnadu

img

மத அடிப்படையிலான குடியுரிமை இந்தியாவின் வரலாறு அல்ல! ஆபத்தான திசையில் நாடு பயணிக்கிறது

புதுதில்லி, டிச.10- குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மூலம் “தவறான திருப்பத்தில் ஆபத் தான திசையில் இந்தியா செல்கிறது” என சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் விமர்சித்துள் ளது. மத அடிப்படையிலான குடியுரி மைச் சட்டத்திருத்த மசோதா நிறை வேற்றப்படும் பட்சத்தில், அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அமெ ரிக்கா வருவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் கூறியுள்ளது. மத்திய பாஜக அரசானது, 1955-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் பல திருத்தங்களை ஏற்படுத்தும் வகையில், இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா -2019ஐ நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய மசோதா மூலம்- 31.12.2014-க்கு முன்பாக ஆப்கானிஸ் தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மதப் பிரச்சனை கார ணமாக, இந்தியாவிற்கு வரும் இந்துக்கள், சீக்கியர், ஜைனர், கிறிஸ்த வர், பார்சி மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்த அகதிகள், இந்தியக் குடியுரிமை பெற முடியும். மேலும், இதற்காக அவர்கள் 11 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டி யதில்லை. 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே குடியுரிமை பெறலாம். ஆனால் இது இஸ்லாமியர்களுக்கு மட்டும் பொருந்தாது என்று கூறப்பட் டுள்ளது.  மாநிலங்களவையில் பெரும் பான்மை பலம் இல்லையென்றாலும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு இந்த மசோதாவை நிறைவேற்றிவிடுவதில் பாஜக உறுதியாக இருக்கிறது. மத அடிப்படையிலான இந்த குடி யுரிமை சட்டத் திருத்தம், மதச்சார்பற்ற இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு சற்றும் பொருந்தாது என்ப தால், எதிர்க்கட்சிகள் இந்த மசோதா விற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வரு கின்றன. இந்நிலையில், சர்வதேச மத சுதந்தி ரத்துக்கான அமெரிக்க ஆணையமும் (USCIRF) மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “குடியுரிமைச் சட்டத்திருத்தம் தவ றான திசையை நோக்கிய ஆபத்தான போக்கு ஆகும். இது இந்தியாவின் மதச்சார்பற்ற பன்முகத்தன்மைக்கும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு, ‘சட்டத் தின்முன் அனைவரும் சமம்’ என்பதை உறுதி செய்யும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது” என்று அமெரிக்க ஆணையம் கூறியுள்ளது. மேலும், “இந்த சட்டம் புலம் பெயர்ந்தோருக்கான மத ரீதியிலான குடி யுரிமைக்கான பாதையை வகுக்கி றது. குறிப்பாக இந்த சட்டத்தில் முஸ் லிம்களை மட்டும் விலக்கி, மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்க சட்டப்பூர்வமான வழியை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்தியாவின் வரலாறு இது கிடையாது. இந்தியா எப்போதும் இப்படி மதத்தை அணுகியது கிடை யாது. ஆனால் இப்போது நிலைமை மோசமாகி விட்டது. இதனால் பல மில்லியன் இஸ்லா மிய மக்கள் நாடின்றி வெளியேற்றப்படு வார்கள். இது ஆழ்ந்த கவலையை ஏற் படுத்துகிறது. இதனைத் திரும்ப பெறும் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் மேற்கொள்ளவேண்டும். - என்று சர்வதேச மத சுதந்திரத்துக் கான அமெரிக்க ஆணையம் கூறி யுள்ளது. மேலும், “இந்திய அரசியல மைப்புக்கு எதிராக மத உள்நோக்கத் துடன் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்திருக்கும்பட்சத்தில் அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அர சியல்வாதிகளுக்கு அமெரிக்கா தடை விதிக்க வேண்டும்” எனவும் ஆணை யம் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையத்தின் பரிந்துரையை, அமெ ரிக்க அரசு கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. என்றாலும், இது தொடர்பாக அமெரிக்க அரசு பரிசீலனை செய்யும் என்று கூறப்படுகிறது.

;