tamilnadu

img

ஸ்டார்ட் அப்  நிறுவனங்களில் வழக்கமான சம்பளம்... ஊதிய உயர்வுகளும் அறிவிப்பு

புதுதில்லி:
கொரோனா பொதுமுடக்கத்தையொட்டி, ஊழியர்களுக்கான சம்பளத்தை குறைத்த ‘ஜொமாட்டோ’ உள்ளிட்ட ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், தற்போது வழக்கமான சம்பளத்தை வழங்கத் துவங்கியுள்ளன.சேவைகளை வீடுகளுக்கே கொண்டுசேர்க்கும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் கொரோனாவையொட்டி கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வருவாய் இழப்பு மற்றும் செலவுக்குறைப்பு என்றஅடிப்படையில், ஊழியர்களுக்கான சம்பளத்தைக் குறைத்தன. ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கமும் செய்யப்பட்டனர்.

இந்நிலையிலேயே, ‘ஸ்டார்ட் அப்’ துறை இயல்பு நிலைக்குத் திரும்பத் துவங்கியுள்ளது.இதையடுத்து, உணவு விநியோக நிறுவனமான ‘ஜொமாட்டோ’, மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் குரோபர்ஸ் நிறுவனம் ஆகியவை ஜூலை 1 முதல் முழு சம்பளத்தைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன. அப்கிரேடு (upgrad), இக்ஷிகோ (Ixigo) உள்ளிட்ட நிறுவனங்களும் இதேபோல முழு சம்பளத்தை தருவதற்கு ஆரம்பித்துள் ளன. ஸ்னாப்டீல், 700 ஊழியர்களுக்கு முழுச் சம்பளம் வழங்குவதுடன், சம்பள உயர்வையும் அறிவித்துள்ளது. புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

;