tamilnadu

img

தொழிலாளர் சட்டங்களை திருத்துவது கொரோனாவை விடக் கொடியது... மோடி அரசுக்கு ஆர்எஸ்எஸ் தொழிற்சங்க பிரிவு கண்டனம்

புதுதில்லி:
கொரோனா பரபரப்புக்கு இடையேயும், தனது எஜமானர்களான முதலாளிகளை மறந்துவிடாமல் அவர்களை மனங்குளிரச் செய்யும் வேலைகளில் மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, வேலைநேரத்தை 12 மணிநேரமாக அதிகரித்து, தொழிலாளர்களை கொத்தடிமையாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களையும் செய்ய உள்ளது. முன்னோட்டமாக பாஜகஆளும் குஜராத், மத்தியப்பிரதேச மாநிலங்களில் 12 மணிநேர வேலைக்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகிவிட்டது. 

இதற்கு இடதுசாரி தொழிற்சங்கங் கள் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வரும் நிலையில், பாஜகவின் குருபீடமான ஆர்எஸ்எஸ் அமைப்பும் தற்போது எதிர்ப்புக் குரலை எழுப்பியுள்ளது. ஆர்எஸ்எஸ்-ஸின் தொழிற் சங்கப் பிரிவான பாரதிய மஸ்தூர் சங்-கின் (பிஎம்எஸ்) தேசியத் தலைவர் சஜிநாராயணன், தொழிலாளர் சட்டங்களைத் திருத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.“வேலை நேரத்தை நீட்டிப்பது உள்ளிட்ட தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவதற்கு மத்திய அரசு மாநிலங்களை அனுமதித்தால், அது கொரோனாவைரஸ் தொற்றுநோயை விட மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.“தொழிலாளர்கள் திரும்பி வரவேண்டும் என்று மாநிலங்கள் விரும்பினால், அத்தொழிலாளர்களுக்கு இலவச ரயில் டிக்கெட் மற்றும் மின்னணுபாஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படவேண்டும். தொடர்ந்து வேலை செய்யுமாறு அவர்களை கட்டாயப்படுத்த முடியாது” என்றும் நாராயணன் குறிப்பிட்டுள்ளார்.

;